Friday, October 11, 2013

எழுத்து வரிசை - 41


எழுத்து வரிசை புதிர் - 41 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1. கந்த சஷ்டி கொண்டாடப்படுவது  (2,5) - 1988
2. பேச்சில் மன்னனடி  (7,4) - 1984
3. கரம் பற்றியவள் (1,6) - 1978
4. இளைஞன் வலம்வரும் பூமி  (4,4,4) - 2012   
5. நகரப் பேருந்து   (3,2) - 1955 
 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை: (2,3)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை 40 க்கான விடைகள்:
  
1. விஷ்ணு மகிமை (4,3) - 1968                                              -  திருமால் பெருமை 
2. அதிர்ஷ்டச் சீட்டு (4,4) - 1982                                               -  லாட்டரி டிக்கெட் 
3. இனிக்கும் இளம் பருவம் (6,3)- 2008                              -  தித்திக்கும் இளமை
4. கவலைகொள்ளாத இளைஞர் குழு (8,4,4) - 2013   -  வருத்தப்படாத வாலிபர் சங்கம்
5. திருவிளையாடல் (2) - 2012                                               -  லீலை 
6. ஞாயிறு பிறக்க இன்னும் இருப்பது 7 மணி நேரம் (6,6,1,2) - 2010 - சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி
 
எழுத்து வரிசை புதிர் விடை -         சதி லீலாவதி     

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:      யோசிப்பவர்,  முத்து,  Madhav, மதுமதி  


இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

கலையன்பன் அனுப்பிய சில விடைகளுக்காக அவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

ராமராவ்

4 comments:


  1. 1. கந்த சஷ்டி கொண்டாடப்படுவது (2,5) - சூர சம்ஹாரம்
    2. பேச்சில் மன்னனடி (7,4) - வாய்ச்சொல்லில் வீரனடி
    3. கரம் பற்றியவள் (1,6) - கை பிடித்தவள்
    4. இளைஞன் வலம்வரும் பூமி (4,4,4) - வாலிபன் சுற்றும் உலகம்
    5. நகரப் பேருந்து (3,2) - டவுன் பஸ்

    இறுதி விடை :
    வாகை சூட வா

    ReplyDelete
    Replies
    1. Madhav,

      உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  2. 1. கந்த சஷ்டி கொண்டாடப்படுவது (2,5) - 1988 சூர ஸம்ஹாரம்
    2. பேச்சில் மன்னனடி (7,4) - 1984 வாய்ச்சொல்லில் வீரனடி
    3. கரம் பற்றியவள் (1,6) - 1978 கை பிடித்தவள்
    4. இளைஞன் வலம்வரும் பூமி (4,4,4) - 2012 வாலிபன் சுற்றும் உலகம்
    5. நகரப் பேருந்து (3,2) - 1955 டவுன் பஸ்

    சூ வா கை வா ட ==> வாகை சூடவா

    ReplyDelete
    Replies
    1. முத்து,

      உங்களது அனைத்து விடைகளும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

      Delete