Monday, October 28, 2013

எழுத்து வரிசை - 43


எழுத்து வரிசை புதிர் - 43 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1. புகுந்த வீட்டில் இப்படி அடியெடுத்து வரணும்  (3,2,3,1) - 1989
2. நெஞ்சுக்குள் வர்ணஜாலம்?    (6,5) - 1988
3. நாட்டியத்திற்கும் நாதஸ்வரத்திற்கும் போட்டா போட்டி?  (4,6) - 1968
4. பூஜைக்கான புஷ்பங்கள்  (5,4) -  1982   
5. அரசாளத்தக்க மாநிலம்?   (5) - 1999 
 

இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை:      (5)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை 42 க்கான விடைகள்:
 
1. மாவுத்தன்   (3,3) - 1960                       -   யானைப் பாகன்
2. நேரம்   (2) - 1999                                   -   டைம்
3. முனிவன் பிறப்பு  (5) - 1980              -   ரிஷிமூலம்
4. அதிதி  (5) - 2010                                   -   விருந்தாளி
5. ஐந்தெழுத்து அதிபதி  (6,7) - 1959   -   பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
  
 
எழுத்து வரிசை புதிர் விடை -          பிரியா விடை       

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:      முத்து,  Madhav, மதுமதி  

இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 
 
சில சரியான விடைகளை அனுப்பிய கலையன்பனுக்கும் பாராட்டுக்கள்.

 
ராமராவ்

6 comments:

  1. 1. புகுந்த வீட்டில் இப்படி அடியெடுத்து வரணும் (3,2,3,1) - 1989 வலது காலை வைத்து வா
    2. நெஞ்சுக்குள் வர்ணஜாலம்? (5,5) - 1988 மனசுக்குள் மத்தாப்பு (6,5)?
    3. நாட்டியத்திற்கும் நாதஸ்வரத்திற்கும் போட்டா போட்டி? (4,6) - 1968 தில்லானா மோகனாம்பாள்
    4. பூஜைக்கான புஷ்பங்கள் (5,4) - 1982 அர்ச்சனை பூக்கள்
    5. அரசாளத்தக்க மாநிலம்? (5) - 1999 ராஜஸ்தான்

    வ ம தி அ ரா ==> அமராவதி

    ReplyDelete
    Replies
    1. முத்து,

      விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  2. 1. புகுந்த வீட்டில் இப்படி அடியெடுத்து வரணும் (3,2,3,1) - வலது காலை வைத்து வா
    2. நெஞ்சுக்குள் வர்ணஜாலம்? (5,5) - மனசுக்குள் மத்தாப்பூ
    3. நாட்டியத்திற்கும் நாதஸ்வரத்திற்கும் போட்டா போட்டி? (4,6) - தில்லானா மோகனாம்பாள்
    4. பூஜைக்கான புஷ்பங்கள் (5,4) - அர்ச்சனைப்பூக்கள்
    5. அரசாளத்தக்க மாநிலம்? (5) - ராஜஸ்தான்

    இறுதி விடை:
    அமராவதி

    ReplyDelete
    Replies
    1. Madhav,

      உங்கள் விடைகள் எல்லாம் சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  3. எழுத்து வரிசை - 43
    1.வலது காலை வைத்து வா
    2.மனசுக்குள் மத்தாப்பு
    3.தில்லானா மோகனாம்பாள்
    4.அர்ச்சனை பூக்கள்
    5.ராஜஸ்தான்
    விடை;அமராவதி

    ReplyDelete
    Replies
    1. மதுமதி,

      எல்லா விடைகளும் சரியே. நன்றி. பாராட்டுக்கள்.

      Delete