Saturday, August 24, 2019

எழுத்துப் படிகள் - 269



எழுத்துப் படிகள் - 269 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் பிரபு  நடித்தவை.  ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (6) பிரசாந்த்   கதாநாயகனாக    நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 269 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   சூப்பர் குடும்பம்     

2.   அடுத்தாத்து ஆல்பர்ட்      

3.   முப்பெரும் தேவியர்   

4.   செந்தமிழ்ப் பாட்டு            

5.   நாளைய செய்தி       

6.   தம்பிதுரை      


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Thursday, August 22, 2019

சொல் வரிசை - 218


சொல் வரிசை - 218   புதிருக்காக, கீழே  ஏழு  (7)  திரைப்படங்களின்    பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   என் தம்பி(---  ---  --- தத்தும் கிளியே உன்னை நானறிவேன்) 
  
2.   பால்குடம்(---  ---  ---  --- அது கண்குளிர தண்ணொளியை)

3.   மாயி(---  ---  ---  ---  --- வார்த்தை ஒன்று பேசு)

4.   கூலிக்காரன்(---  ---  ---  --- நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்  

5.   நிறைகுடம்(---  ---  ---  ---  --- விழியே நீ கண்ட நிழல் நானே)

6.   குப்பத்து ராஜா(---  ---  --- காலம் குடிசைக்கு பொறக்குதடா)

6.   ஆட்டோ ராஜா(---  ---  --- எதனால் என் மீது கோபம்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற திரைப்படத்தின்   பெயரையும்  கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Monday, August 19, 2019

சொல் அந்தாதி - 128



சொல் அந்தாதி - 128  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)  திரைப்படங்களின்    பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. எங்கள் தங்க ராஜா - இரவுக்கும் பகலுக்கும்    
2. லிங்கா                   
3. ஒரு மோதல் ஒரு காதல்             
4. ஆள்                 
5. முத்து மண்டபம்                      
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்   பின்னூட்டம் மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்