Thursday, December 31, 2015

எழுத்துப் படிகள் - 128

எழுத்துப் படிகள் - 128 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (8) எம்.ஜி.ஆர்.  கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 128 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   தங்கப்பதுமை                        
2.   உத்தம புத்திரன்                 
3.   புதையல்                  
4.   தவப்புதல்வன்                  
5.   பாதுகாப்பு                
6.   பாட்டும் பரதமும் 
7.   தெய்வப்பிறவி  
8.   பொம்மை கல்யாணம்   
            
வற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  

1. இந்த திரைப்படத்தின் கதை வசனகர்த்தா: கலைஞர் கருணாநிதி 

2. இதே திரைப்படத்தின் தலைப்பில் பார்த்திபன் கதாநாயகனாக
    நடித்து ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது. 

3. இந்த தலைப்பை புனைபெயராகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற
    தமிழ் எழுத்தாளர் வாழ்ந்தார்.     

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Saturday, December 26, 2015

சொல் வரிசை 101

சொல் வரிசை - 101  புதிருக்காக, கீழே  ஆறு  (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     இசை பாடும் தென்றல் (----   ----   யார் எடுத்தது)  
2.     இரும்புத்திரை (----   ----   அன்பருக்கு நானிருக்கும்)  
3.     விடியும்வரை காத்திரு (----   ----   ----   நெஞ்சோடு உண்டு) 
4.     தந்துவிட்டேன் என்னை (----   ----   ----   ----   தேதி சொன்ன மங்கை நீ )
5.     சின்ன தம்பி (----  ----  ----   ----   நீயின்றி நான் எங்கே)
6.     ஊருவிட்டு ஊரு வந்து (----   ----  ----  உன்னை தழுவ தினம் சம்மதமே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்  

Thursday, December 24, 2015

எழுத்துப் படிகள் - 127

எழுத்துப் படிகள் - 127 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,4)  பிரபு  கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 127 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   தீர்ப்புகள் திருத்தப்படலாம்                     
2.   அன்னக்கிளி               
3.   அக்னி சாட்சி                
4.   சாட்டை இல்லாத பம்பரம்                
5.   நெல்லிக்கனி               
6.   வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்
7.   துணையிருப்பாள் மீனாட்சி 
            
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை: ஒரு நகைச்சுவை நடிகரின் பெயர். 

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Saturday, December 19, 2015

சொல் வரிசை 100

திரைஜாலம் - சொல் வரிசை புதிர் 2012 ம் ஆண்டு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இதுவரை 99 புதிர்கள் வெளிவந்துள்ளன. இன்று சொல் வரிசை - 100 வது புதிர் வெளியாகிறது. 
 
நான் அறிந்தவரை இந்த மாதிரி புதிர்களை தொடர்ந்து அமைப்பது தமிழ் மொழியில் மட்டுமே சாத்தியம் என்று அறிகிறேன். வேறு எந்த மொழியிலும் இந்த மாதிரி திரைப்படப் பாடல்களின் தொடக்கச் சொற்களை மட்டும் எழுத்தில் கொண்டு வேறு ஒரு திரைப்படப் பாடலின் பெயரை கண்டுபிடிப்பது என்பது சாத்தியமாக தெரியவில்லை. அப்படி சாத்தியம் என்றாலும் வெகு வெகு சில புதிர்கலையே அமைக்க முடியும் (குறைந்தது 6 சொற்கள்). கன்னட மொழியிலும் ஹிந்தி மொழியிலும் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் எனக்கு தெரிந்தவரை முடியவில்லை. தமிழ் மொழியின் சிறப்பே சிறப்பு.  

இந்த சொல் வரிசை - 100 புதிருக்கான விடை  மொத்தம் 16 சொற்களைக் கொண்டது. இந்த விடைக்கான பாடல் தான் இந்த சொல் வரிசை புதிரைத் தொடங்குவதற்கு எனக்கு தூண்டுகோலாக அமைந்தது. 

சொல் வரிசை - 100  புதிருக்காக, கீழே  பதினாறு   (16)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     சின்ன ஜாமீன் (----   ----   ----  ----  அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா)  
2.     சாந்தி நிலையம் (----   ----   ----   பேச்சு வரவில்லை)  
3.     மணப்பந்தல் (----   ----   நின்றதிலே பார்வை இழந்தேன்) 
4.     சவாலே சமாளி (----   ----   ----  சொன்னது என்னை தொடாதே)
5.     பார்த்தேன் ரசித்தேன் (----  ----  ----   சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்)
6.     யார் மணமகன் (----   ----  ----  உன் நினைவில் மலரும் என் நெஞ்சம்)
7.     வளையாபதி (----   ----   மலர் பொய்கை கண்டேன்)
8.     கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (----   ----   ----  ஒரு கணம் போதும்)  

9.     உலகம் சுற்றும் வாலிபன் (----   ----   ----   ----  ஆனந்த கவிதையின் ஆலயம்)  
10.    நினைத்ததை முடிப்பவன் (----   ----   உன்னை ஏமாற்றும்) 
11.    நீ வருவாய் என (----   ----   ----  பூத்திருந்தேன் நீ வருவாயென )
12.    செங்கமலத்தீவு (----  ----  ----   ----   மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்)
13.    கெட்டிக்காரன் (----   ----  ----  கேட்டேன் கேட்காத இசையை)
14.    களத்தூர் கண்ணம்மா (----   ----   ----   மதுவில் சுவை எதற்கு)
15.    கன்னிப்பெண் (----   ----  ----  மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா)
16.    நங்கூரம் (----   ----   நீ இல்லாமல் நான் இல்லையே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்  

Wednesday, December 16, 2015

எழுத்துப் படிகள் - 126

எழுத்துப் படிகள் - 126 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,3)  கார்த்திக் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 126 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   நீலவானம்                    
2.   ராணி லலிதாங்கி              
3.   நவராத்திரி               
4.   அன்பளிப்பு               
5.   கல்தூண்               
6.   தேனும் பாலும்              
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Friday, December 11, 2015

சொல் வரிசை - 99

சொல் வரிசை - 99  புதிருக்காக, கீழே  ஏழு  (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     உனக்காகவே வாழ்கிறேன் (----   ----   ----  ----  கண்ணீர் குயில் பாடுகிறேன் வா)  
2.     நிலவே நீ சாட்சி (----   ----   ----   ஏதேதோ நடக்கும் நானறிவேன்)  
3.     நெஞ்சிருக்கும்வரை (----   ----   நானும் அங்கே உன்னோடு) 
4.     அதே கண்கள் (----   ----   ----  தா உயிரைத் தா)
5.     காத்திருக்க நேரமில்லை (----  ----  ----   ----   நீ காத்திருக்கும் வாசமுல்லை)
6.     வெண்ணிற ஆடை (----   ----  ----  ---- ஒரு நினைவு என்பதென்ன)
7.     காதல் வாகனம் (----   ----   ----  வா ஒரு ரகசியம்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்  

Wednesday, December 9, 2015

எழுத்துப் படிகள் - 125

எழுத்துப் படிகள் - 125 க்கான அனைத்து திரைப்படங்களும் சரத்குமார் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (7) சரத்குமார் கதாநாயகனாக நடித்ததே. 

எழுத்துப் படிகள் - 125 க்கான திரைப்படங்களின் பெயர்கள்  

1.   நம்ம ஊரு மாரியம்மா                   
2.   சூரிய வம்சம்             
3.   விண்ணுக்கும் மண்ணுக்கும்              
4.   தங்கமான தங்கச்சி              
5.   சமஸ்தானம்              
6.   பேண்டு மாஸ்டர்  
7.   கட்டபொம்மன்           
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  திரைப்படத் தலைப்பின் பொருள்:   "பெருங்காற்று"  
                சமீபத்தில் வெளிவந்த திரைப்படம். 

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Friday, December 4, 2015

சொல் வரிசை - 98

சொல் வரிசை - 98  புதிருக்காக, கீழே  ஏழு  (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     வில்லு (----   ----   ----   தோப்பிலே வாலிபால் ஆடலாமா)  
2.     வேட்டைக்காரன் (----   ----   ----   ----  உன்ன நான் பாக்கையில கிர்ருங்குது)  
3.     அபூர்வ சகோதரர்கள் (----   ----   ----  அது ராங்கா போனதில்லே) 
4.     மனதில் உறுதி வேண்டும் (----   ----   மீரா கேட்கிறாள்)
5.     கிராமத்து அத்தியாயம் (----  ----  நான் ஒண்ணு பார்த்தேன்)
6.     கொம்பேறி மூக்கன் (----   ----  முத்தம் கேட்கும் நேரம்)
7.     கோழி கூவுது (----   ----   ----  வரம் தரும் வசந்தமே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் *பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்