Saturday, December 29, 2012

எழுத்துப் படிகள் - 13



எழுத்துப் படிகள் - 13 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை
1 . குருதிப்பொட்டு
2 . கலைமகளின் சூளுரை
3 . சாதி இனமா? பண்பா?
4 . ஐஸ்வர்யம்
5 . வ.உ.சி
6 . சற்குணன்
7 . ஆண்டவனின் அவதாரம்
8 . வெற்றிச்சின்னமான பொன் வில்லை
9 . பச்சை நிறக்கல்

திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 9-வது படத்தின் 9-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.


விடைக்கான திரைப்படமும் சிவாஜி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 12 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 . எந்த இடத்திலிருந்தோ வந்த ஓசை - எங்கேயோ கேட்ட குரல்
2 . தமையனின் பர்வதம் - அண்ணாமலை
3 . நீதிப்போர் - தர்ம யுத்தம்
4 . சிப்பாய் - ராணுவ வீரன்
5 . மந்த்ராலய சுவாமி - ஸ்ரீராகவேந்திரர்
6 . சிவனின் நுதல்விழி - நெற்றிக்கண்
இறுதி விடை: தங்கமகன்

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : முத்து, 10அம்மா,  
ராமச்சந்திரன் வைத்தியநாதன்


இவர்கள் மூவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்

 

Tuesday, December 18, 2012

எழுத்து வரிசை - 10


எழுத்து வரிசை புதிர் - 10 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

 

1 இந்திய அழகன் ரஜினி?
2 நரேனின் உள்ளம் இருக்கும் மட்டும்
3 பிரியமான தந்தை சிவாஜி
4 கமல் ரஜினி வாலிபம் தள்ளாடுகிறது
5 ஓடம் செலுத்தும் எம்ஜி.ஆர்.
6 சிவாஜியின் செந்நிற பூமி? 
 
 

 

இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும். அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 9 க்கான விடைகள்:



1 கே.ஆர்.விஜயா வெட்கப்படும் புல் - நாணல்
2 தசரா மும்முரத்தில் ஜெமினி கணேசன் - ராமு
3 விஜய் அம்பெய்ய பயன்படுத்தியது - வில்லு
4 சிவகுமார் ஒரு காவலாளி ஒரு நகைச்சுவை நடிகரும் கூட - வாட்ச்மேன் வடிவேலு
5 கமலின் ரத்த வெள்ளம் - குருதிப்புனல்
6 ராதாவின் தமக்கை புருஷன் சிவாஜி? - அம்பிகாபதி

எழுத்து வரிசை புதிர் விடை - தில்லுமுல்லு

சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, MeenuJai


இவர்கள் இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.


ராமராவ்
 

Saturday, December 15, 2012

எழுத்துப் படிகள் - 12



எழுத்துப் படிகள் - 12 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
 
அனைத்து திரைப்படங்களும் ரஜினிகாந்த் நடித்தவை
1 . எந்த இடத்திலிருந்தோ வந்த ஓசை
2 . தமையனின் பர்வதம்
3 . நீதிப்போர்
4 . சிப்பாய்
5 . மந்த்ராலய சுவாமி
6 . சிவனின் நுதல்விழி

திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.


விடைக்கான திரைப்படமும் ரஜினிகாந்த் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 11 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 காத்தவராயன்
2 பாலும் பழமும்
3 அன்னை இல்லம்
4 சிரஞ்சீவி
5 முதல் மரியாதை
6 பசும் பொன்
7 பாட்டும் பரதமும்
இறுதி விடை: பாரம்பரியம்

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முத்து


இவர்கள் இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
 
ராமராவ்

Tuesday, December 11, 2012

சொல் வரிசை - 13

 
 
கீழே ஆறு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 . ஜெயம் கொண்டான்
2 . பையா
3 . போலீஸ்காரன் மகள்

4 . தேன் நிலவு
5 . அம்மன் கோயில் கிழக்காலே
6 . பாத காணிக்கை 
 
 
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின்முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடல்: வீட்டில் குஷ்பூ பாடும் பாடல்.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 12 க்கான விடைகள்:
திரைப்படம்                                                பாடலின் தொடக்கம்                               தொடக்கச் சொல்

1 . காக்க காக்க                                      உயிரின் உயிரே உயிரின் உயிரே                       உயிரின்
2 . சந்தோஷ் சுப்ரமண்யம்                    உயிரே உயிரே பிரியாதே                                   உயிரே
3 . பாத காணிக்கை                               உனது மலர் கொடியிலே                                   உனது

4 . கிரீடம்                                              விழியில் உன் விழியில்                                       விழியில்
5 . நண்பன்                                            என் பிரண்ட்ஸ் போல யாரு                                என்
6 . தோட்டா                                          முகம் பூ மனம் பூ                                                  முகம்
7 . பாலும் பழமும்                                நான் பேச நினைப்பதெல்லாம்                           நான்
8 . பாக்யலட்சுமி                                  காண வந்த காட்சி என்ன                                    காண
9 . வசந்தத்தில் ஓர் நாள்                     வேண்டும் வேண்டும் இந்த உறவு                       வேண்டும்
 
 
 
மேலே உள்ள ஒன்பது தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்


உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: தாண்டவம்


எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் இருவர் மட்டுமே : Madhav , MeenuJai

இவர்கள் இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
 
 
 
 
ராமராவ்