Wednesday, October 9, 2013

சொல் வரிசை - 43


சொல் வரிசை - 43  புதிருக்காக, கீழே 8 (எட்டு ) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
1. தளபதி   ( -----    -----    ------    ------   எண்ணங்களில் தேன் வார்த்ததோ)
2. அபூர்வ சகோதரர்கள் ( -----    ------   ------   ------ அந்த மணமகள்தான் வந்த நேரமடா )
3. எதிர் நீச்சல்  ( -----   -----   -----   ஊமை நெஞ்சு கத்துதே)
4. வசந்தத்தில் ஓர் நாள் ( -----  -----   -----   ------   வெண்பனி தென்றல் உள்ளவரையில் ) 
5முள்ளும் மலரும்  ( -----   -----   -----   நெய் மணக்கும் கத்தரிக்கா )
6தேசிங்கு ராஜா  ( ----   ----   -----   -----  சரி என்னை எப்போ சேர்வே )
7. பிரியமான தோழி ( -----   -----   -----    -----  வெல்லும்வரை வாழ்க்கை வென்றுவிடலாம் ) 
8. தில் ( -----   -----   ------   -----   தீயை தீண்டும் தில் தில் ) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 42 க்கான விடைகள்:
 
திரைப்படம்                                பாடலின் தொடக்கம் 
 
1. சந்திப்பு  ( ஆனந்தம் விளையாடும் வீடு  நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு )
2. முறை மாமன்  ( ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் வந்தது  ஆனந்த குயில் இசை கேட்டு )
3. நாடோடி  ( பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் இங்கே )
4. இது சத்தியம் (மனம் கனிவான இந்தக் கன்னியை கண்டால் கல்லும் கனியாகும் ) 
5தென்றல் வீசும்  ஆசையில் பிறப்பது துணிவு அந்த துணிவினில் பிறப்பது தெளிவு )
6ஜெய கோபி ( ஊஞ்சலில் ஒய்யாரா  உல்லாசம் கொள்வாயே  ஆனந்தமுடன் ஆடு அன்பாய் )
7. சூர சம்ஹாரம் ( ஆடும் நேரம் இதுதான் இதுதான் வாவா வாவா பாடும் நேரம் இதுதான் இதுதான் வாவா)  

 
மேலே உள்ளதொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
 
ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம்
ஆசையில் ஊஞ்சலில் ஆடும்                   

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:       பூவே உனக்காக  
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் :  முத்து, Madhav, மதுமதி. 

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

7 comments:

  1. வணக்கம்
    அறிவுக்கு விருந்தாக அமையும் புதிர்கள் அருமை வாழ்த்துக்கள்
    விடைகான முயற்ச்சி செய்கிறேன்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன்,

      உங்கள் வருகைக்கும், உங்களது கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
      முயன்றால் முடியாதது எதுவுமில்லை. புதிரை விடுவிப்பதில் உங்களுக்கு ஏதாவது உதவி / குறிப்புகள் இன்னும் வேண்டுமென்றால் உதவுகிறேன்.

      நன்றியுடன்,
      ராமராவ்

      Delete
  2. சொல் வரிசை - 43

    1.புத்தம் புது பூ பூத்ததோ
    2.புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா
    3.பூமி என்ன சுத்துதே
    4.- வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
    5. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு
    6.ஒரு ஒர ஒர பார்வை
    7.வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்
    8.வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும்
    விடை;புத்தம் புது பூமி வேண்டும். நித்தம் ஒரு வானம் வேண்டும்
    திரைப்படம்;திருடா திருடா

    ReplyDelete
    Replies
    1. மதுமதி,

      உங்களது விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

      Delete

  3. 1. தளபதி ( புத்தம் புது பூ பூத்ததோ எண்ணங்களில் தேன் வார்த்ததோ)
    2. அபூர்வ சகோதரர்கள் ( புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா அந்த மணமகள்தான் வந்த நேரமடா )
    3. எதிர் நீச்சல் ( பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே)
    4. வசந்தத்தில் ஓர் நாள் ( வேண்டும் வேண்டும் உந்தன் உறவு வெண்பனி தென்றல் உள்ளவரையில் )
    5. முள்ளும் மலரும் ( நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா )
    6. தேசிங்கு ராஜா ( ஒரு ஓர ஓர பார்வை சரி என்னை எப்போ சேர்வே )
    7. பிரியமான தோழி ( வானம் என்ன வானம் தொட்டுவிடலாம் வெல்லும்வரை வாழ்க்கை வென்றுவிடலாம் )
    8. தில் ( வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயை தீண்டும் தில் தில் )

    புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும்
    இடம் பெற்ற படம்: திருடா திருடா

    நன்றி.
    முத்து


    ReplyDelete
    Replies
    1. முத்து,

      உங்கள் அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி

      Delete

  4. 1. தளபதி ( ----- ----- ------ ------ எண்ணங்களில் தேன் வார்த்ததோ)
    - புத்தம் புது பூ பூத்ததோ
    2. அபூர்வ சகோதரர்கள் ( ----- ------ ------ ------ அந்த மணமகள்தான் வந்த நேரமடா )
    - புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா
    3. எதிர் நீச்சல் ( ----- ----- ----- ஊமை நெஞ்சு கத்துதே)
    - பூமி என்னச் சுத்துதே
    4. வசந்தத்தில் ஓர் நாள் ( ----- ----- ----- ------ வெண்பனி தென்றல் உள்ளவரையில் )
    - வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
    5. முள்ளும் மலரும் ( ----- ----- ----- நெய் மணக்கும் கத்தரிக்கா )
    நித்தம் நித்தம் நெல்லுச்சோறு
    6. தேசிங்கு ராஜா ( ---- ---- ----- ----- சரி என்னை எப்போ சேர்வே )
    ஒரு ஒர ஓரப் பார்வை
    7. பிரியமான தோழி ( ----- ----- ----- ----- வெல்லும்வரை வாழ்க்கை வென்றுவிடலாம் )
    வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்
    8. தில் ( ----- ----- ------ ----- தீயை தீண்டும் தில் தில்
    வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும்

    இறுதி விடை :
    புத்தம் புது பூமி வேண்டும்
    நித்தம் ஒரு வானம் வேண்டும்
    - திருடா திருடா

    ReplyDelete