சொல் வரிசை - 44 புதிருக்காக, கீழே 8 (எட்டு ) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பெற்றால் தான் பிள்ளையா ( ----- ----- ------ ------ இந்த நாடே இருக்குது தம்பி )
2. சித்திரம் பேசுதடி ( ----- ------ ------ இதயத்தை மாத்து இது ஒரு காதல் கூத்து )
3. 3 ( ----- ----- ----- நீ பார்த்த நொடிகள் )
4. பாவ மன்னிப்பு ( ----- ----- ----- ----- ----- ----- வானம் மாறவில்லை )
5. அப்பு ( ----- ----- ----- தரமாட்டேன் தரமாட்டேன் இடம் தரமாட்டேன் )
6. மயங்குகிறாள் ஒரு மாது ( ------ ----- ----- அது தரவேண்டும் வளர்காதல் இன்பம் )
7. மயக்கம் என்ன ( ----- ----- ----- ----- ----- போச்சு அது போச்சு அட தண்ணீருல )
8. ராஜ பாண்டி ( ----- ----- ------ ----- மண் குடிசை தேடி வந்த மன்மத ரதத்தேர் நீ )
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் வரிசை - 43 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்
1. தளபதி ( புத்தம் புது பூ பூத்ததோ எண்ணங்களில் தேன் வார்த்ததோ)
2. அபூர்வ சகோதரர்கள் ( புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா அந்த மணமகள்தான் வந்த நேரமடா )
3. எதிர் நீச்சல் ( பூமி என்னை சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே)
4. வசந்தத்தில் ஓர் நாள் ( வேண்டும் வேண்டும் இந்த உறவு வெண்பனி தென்றல் உள்ளவரையில் )
5. முள்ளும் மலரும் ( நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா )
6. தேசிங்கு ராஜா ( ஒரு ஓர ஓர பார்வை சரி என்னை எப்போ சேர்வே )
7. பிரியமான தோழி (வானம் என்ன வானம் தொட்டுவிடலாம் வெல்லும்வரை வாழ்க்கை வென்றுவிடலாம் )
8. தில் ( வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயை தீண்டும் தில் தில் )