Friday, September 19, 2014

எழுத்துப் படிகள் - 80


எழுத்துப் படிகள்80 க்கான அனைத்து திரைப்படங்களும்   ஜெய்சங்கர் நடித்தவை.   இறுதி விடைக்கான திரைப்படமும்   (2,7)  ஜெய்சங்கர்  கதாநாயகனாக  நடித்ததே. 
 
எழுத்துப் படிகள்80 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.      காதலிக்க வாங்க                                        
2.     தெய்வ வம்சம்                                        
3.     விளக்கேற்றியவள்                                      
4.     இரவும் பகலும்                                        
5.     சி.ஐ.டி.சங்கர்                               
         
6.     கருந்தேள் கண்ணாயிரம் 
7.     எதிர்காலம்  
8.     கௌரி கல்யாணம்           
9.     படிக்காதவன் 
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  9-வது படத்தின்  9-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  திரைப்படம் தயாரிப்பு: மாடர்ன் தியேட்டர்ஸ் .
                 கதாநாயகி: எல்.விஜயலட்சுமி 
       
                 திரைப்படத்தின் பெயர் " இரண்டு வீரர்கள்" என்று பொருள்.
                 முதல் எழுத்து "இ" என்ற எழுத்தில் தொடங்கும். 
                 3- வது  எழுத்து "வ"   
   
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

Friday, September 5, 2014

சொல் வரிசை - 69


சொல் வரிசை - 69  புதிருக்காக, கீழே   9 (ஒன்பது) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   கர்ணன் (--- --- --- --- --- கண்ணில் புன்னகை சுமந்து போய் வா)
2.   அபியும் நானும் (--- --- --- --- பொன் வாய் பேசும் தாரகையே) 
3.   தங்க மீன்கள் (--- --- --- என் மீனே மீனே நீ நீந்திய பொன்)
4.   திருக்கல்யாணம் (--- --- --- ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்)
5.   பிரம்மா (--- --- --- எழுந்து ஆடும் மலர்கொடி)
6.   பார் மகளே பார் (--- --- --- --- --- போகுமிடம் சொல்லாமல் ஓடிவிட்டாயே)
7.   பணக்காரப்பெண் (--- --- --- உன் இதழில் எழுதும் இனிய கவிதை)
8.   மணப்பந்தல் (--- --- --- பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி)
9.   மெல்ல திறந்தது கதவு (--- --- --- --- வானம் தேடுதே) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.