Monday, December 30, 2013

எழுத்துப் படிகள் - 53

 

எழுத்துப் படிகள் - 53 க்கான அனைத்து திரைப்படங்களும்  ஜெய்சங்கர்   நடித்தவை.  இறுதி விடைக்கான திரைப்படமும்   (6)  ஜெய்சங்கர்  நடித்ததே. 
 
எழுத்துப் படிகள் - 53 க்கான திரைப்படங்களின் பெயர்கள்

1.   படிக்காதவன்           
2.   பெண் தெய்வம்           
3.   விதி           
4.   இரு வல்லவர்கள்           
5.   எங்க பாட்டன் சொத்து     

6.   உயிர் மேல் ஆசை 
   

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 52  க்கான திரைப்படங்களின் பெயர்கள்:

1.   தெய்வம்          
2.   புது வெள்ளம்           
3.   ஜீவநதி          
4.   புவனா ஒரு கேள்விக்குறி          
5.   அவன் அவள் அது    

6.   பிரேம பாசம்
         
        
இறுதி விடை:          ஜீவனாம்சம்    
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1.  முத்து சுப்ரமண்யம்    
2.  மதுமதி விட்டல்ராவ் 
3.  மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


ராமராவ்
              
      

Saturday, December 28, 2013

சொல் வரிசை - 53

 

சொல் வரிசை - 53   புதிருக்காக, கீழே  6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   தெய்வ மகன் (--- --- --- --- கட்டி கட்டி தள்ளாட முத்தம் இட்டு கொண்டாட)
2.   பிரியமான தோழி (--- --- --- --- --- ஒன் மேனிதான் ஒரு பூந்தொட்டியே)
3.   புதிய பூமி  (--- --- --- --- விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை)
4.   தென்றல் வீசும் (--- --- --- அந்த துணிவினில் பிறப்பது தெளிவு)
5.   தங்கத்தின் தங்கம் (--- --- --- --- --- ஊர் முழுதும் நல்ல கானம் பாடி)
6.   ஸ்டைல் (--- --- --- --- அடி இதுதான் என் வாழ்க்கை)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.


அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:


விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

சொல் வரிசை - 52 க்கான விடைகள்:


திரைப்படம்                                பாடலின் தொடக்கம்   
1.   தாயை காத்த தனயன் (கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து)
2.   சிநேகிதி  (தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா)
3.   படிக்காதவன் (ராஜாவுக்கு ராஜா நான்தான் எனக்கு மந்திரிங்க யாருமில்லே)
4.   காயத்ரி (காலை பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள்)
5.   பொண்ணுக்கு தங்க மனசு (நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம்)
6.   குமுதம் (கல்யாணம் ஆனவரே சௌக்கியமா உங்கள் கண்ணான பொன் மயிலும் சௌக்கியமா)
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
கட்டித் தங்க ராஜாவுக்கு   
காலை நேரம் கல்யாணம்                        

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:        மணியோசை          

சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 

1.  மதுமதி விட்டல்ராவ் 
2.  முத்து சுப்ரமண்யம்   
3.  மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.