சொல் அந்தாதி - 4 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அச்சமில்லை அச்சமில்லை - ஓடுகிற தண்ணியிலே ஒரச விட்டேன்
2. பெண்ணரசி
3. செம்பருத்தி
4. நிலவு சுடுவதில்லை
5. தைப் பொங்கல்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி - 3 புதிருக்கான விடைகள்:
1. சர்வர் சுந்தரம் - சிலை எடுத்தான் இந்த சின்னப் பெண்ணுக்கு
2. புதிய முகம் - கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
3. கற்பூரம் - அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சு அசஞ்சு நடக்கும்
4. தாயை காத்த தனயன் - நடக்கும் என்பார் நடக்காது
5. மணமாலை - நடக்காது ஜம்பம் பலிக்காது
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, மதுமதி, முத்து
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
ReplyDelete1. அச்சமில்லை அச்சமில்லை - ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் .. நெத்தியிலே
2. பெண்ணரசி - நெத்தியிலே நீல நிறப் பொட்டு ...பட்டு
3. செம்பருத்தி - பட்டுப் பூவே மெட்டுப் பாடு ... பூவே
4. நிலவு சுடுவதில்லை - பூவே பனிப்பூவே நானும் மலர்தானே
5. தைப் பொங்கல் -
last song idikkuthu :-(
5. தானே சதிராடும் மாலை வெயில் வேளை
ReplyDeleteMadhav,
Deleteஎல்லா விடைகளையும் சரியாக கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள். நன்றி.
சொல் அந்தாதி - 4
ReplyDelete1.ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன்
2.நெத்தியிலே நீல நிற பொட்டு
3.பட்டுப் பூவே மெட்டுப் பாடு
4.பூவே பனி பூவே நானும் மலர் தானே
5.தானே சதிராடும் மாலை வெயில் வேளை
மதுமதி,
Deleteஅனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
1. அச்சமில்லை அச்சமில்லை - ஓடுகிற தண்ணியிலே ஒரச விட்டேன் ....
ReplyDelete....................
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓட விட்டேன் தண்ணியிலே
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் கைகளிலே
2. பெண்ணரசி நெத்தியிலே நீல நிறப் பொட்டு
..... கரை பட்டு
3. செம்பருத்தி பட்டுப் பூவே மெட்டுப் பாடு ... என்னை தொட்டு தொட்டு தழுவு (பட்டுப் பூவே)
4. நிலவு சுடுவதில்லை பூவே பனிப் பூவே
pudhu poongkuyil
raagangaL paadum
poovae pani poovae
naanum malar dhaanae
5. தைப் பொங்கல் தானே சதிராடும்
இவைதான் என் சிறந்த கணிப்புகள்! தைப் பொங்கல் படப் பாடல் வரிகள் கிடைக்கவில்லை; தானே சதிராடும் இறுதியில் ஓடும் என்று வருவது போல் தெரிகிறது.
முத்து,
Deleteஉங்கள் விடைகள் எல்லாம் சரியே. பாராட்டுக்கள். நன்றி.
தைப்பொங்கல் படப் பாடல் வரிகள். "தானே சதிராடும் மாலை வெயில் வேளை"