Thursday, May 30, 2013

எழுத்து வரிசை - 24



எழுத்து வரிசை புதிர் - 24 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

 

1 சின்னாளப்பட்டி சேலையில் சினேகா (3)
2 இங்கிலாந்து தலைநகரில் பிரஷாந்த்  (4)
3 இன்றே காதல் செய்!  விஜய்    (2,2)
4 இந்நாளைப் போல் எந்நாளும் இருக்க வாழ்த்தும் எம்.ஜி.ஆர்  (3,2,4,3)
5 "முருகா காப்பாற்று" என வேண்டும் கரண்   (5,3)
6 பக்கத்து இல்ல மங்கை அஞ்சலிதேவி (4,4,2)
   
 
 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
 
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
  
குறிப்பு:
 
எழுத்து வரிசைக்கான விடை  (2,4) இந்த பாடலை நினைவுறுத்தும்.   .  :
"நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது"  
 
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 23 க்கான விடைகள்: 
 

1 கமலின் ஏழ்மையின் வண்ணம்  செம்மை  (5,3,4)                         -   வறுமையின் நிறம் சிவப்பு  
2 அஜீத்தின் மணிமுடி  (4)                                                                      -    கிரீடம்  
3 பாக்கியராஜின் இல்லத்தில் விழா !   (3,5)                                       -    வீட்ல விசேஷங்க  
4 ஜெய்சங்கரைக் கண்டு நடனமிடு நாகமே  (2,3)                             -    ஆடு பாம்பே       
5 தனுஷின் லீலைகள் தொடக்கம்   (7,5)                                            -    திருவிளையாடல் ஆரம்பம் 
6 சத்யராஜ் வசிக்கும் சென்னை - 600040, 1வது வீதி (6,3,2)            -    அண்ணாநகர் முதல் தெரு 
7 விஷ்ணு பங்கு பெறும் ஒளிமிக்க விளையாட்டுக் கட்சி (4,3,2) -     வெண்ணிலா கபடி குழு   

 
 
எழுத்து வரிசை புதிர் விடை -         பேரும் புகழும்     

 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, யோசிப்பவர்,  வைத்தியநாதன், 10அம்மா, சாந்தி நாராயணன்      
 
இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.

ராமராவ்

Tuesday, May 28, 2013

எழுத்துப் படிகள் - 26



எழுத்துப் படிகள் - 26 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும்   எம்.ஜி.ஆர்.  நடித்தவை.   இறுதி விடைக்கான  திரைப்படமும்  (6)  எம்.ஜி.ஆர்  நடித்ததே.  

 
மேலும் வழக்கம் போன்ற குறிப்புகளுடன்,   பிரபலமான பாடல் ஒன்றும் அடைப்புக் குறிகளுக்குள்  கொடுக்கப்பட்டிருக்கும்.  அந்தப் பாடல் அந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடலாகவோ அல்லது திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்க உதவுவதாகவோ இருக்கும். 
 
1.   பல்லவன் . (4,4)
      (ஒரு கோடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா )   
2.   முத்து, மாணிக்கம், மரகதம், தங்கம் ........    (7)
      (மானும் ஓடி வரலாம் மாநதியும் ஓடி வரலாம் )  
3.   லவ்வர்ஸ் வண்டி   (3,4)
      (நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு )

4.   மெய்யிழந்த பலிக்கு காவலே மாற்று தேசம்  (6)
      (மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ )
5.   செல்வந்தர் வீட்டோர் (5,5)
          (பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது ) 
6.    எனது தமையன்   (2,4)
       (நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா )


 

திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின்,  இதே  வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
    
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும் 
 
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 25 க்கான குறிப்புகளின் விடைகள்:

 
1.   பாராட்டப்படும் கண்ணழகி நடிகை . (3,2)   -   சபாஷ் மீனா 
      (சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி)   
2.   மயங்கவைக்கும் புன்சிரிப்பு    (4,4)                   -    மோகனப் புன்னகை 
      (----- ----- வீசிடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே)  
3.   இது ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள்  (5,5)  - நல்லதொரு குடும்பம் 
      (சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் எந்தன் தேவன் பாடினான்)
4.   பெண்ணுக்கு வரன் வேண்டும் (5,2)                 -    மணமகன் தேவை  
      (பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே)
5.    இந்திய இல்லம் ?  (3,3)                                           -    பாரத விலாஸ் 
       (இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு) 
6.     பள்ளி செல்லாதவன் ?  (7)                                   -   படிக்காதவன் 
       (ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி)
7.    சிவலீலை  (7)                                                              -    திருவிளையாடல் 
       (பாட்டும் நானே பாவமும் நானே)   
8.    திருமண ஒப்பந்த சடங்கு   (4,5)                       -     நிச்சய தாம்பூலம் 
       (பாவாடை தாவணியில் பார்த்த உருவமா)
9.    அரசரும் சிறியவரும் (5,5)                                    -     மன்னவரு சின்னவரு 
        (மன்னவனே மன்னவனே மனசுக்கேத்த சின்னவனே)
10.   காமராஜர் பற்றி சாவி எழுதிய புத்தகம்  (6,4) - சிவகாமியின் செல்வன்         (அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி)

 
 
இறுதி விடை:   சகலகலா வல்லவன்      
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :  முத்து,  Madhav, யோசிப்பவர், 10அம்மா, சாந்தி நாராயணன்      
 
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
 

ராமராவ்


Saturday, May 25, 2013

சொல் வரிசை - 26



கீழே  6 (ஆறு திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொல்லை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     அரச கட்டளை              ( -----------   புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான் )
2.      ஊட்டி வரை உறவு  ( ---------  நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் )
3.      பூமகள் ஊர்வலம்  ( -------- ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று )
4.      ஜானி               (  -------  வானிலே ஒரே வெண்ணிலா )
5.      அட்டகத்தி      ( --------   ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி ) 
6     மகாபிரபு          (  --------  ----------  ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை ) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால்,  மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.


அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 25 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                              

1.     உயர்ந்த உள்ளம்                ( எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே)
2.      மன்னாதி மன்னன்      ( நீயோ நானோ யார் நிலாவே அவர் நினைவை கவர்ந்தது யார் நிலவே)
3.      மைதிலி என்னை காதலி ( நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை )
4.      ஊட்டி வரை உறவு                 (  அங்கே  மாலை மயக்கம் யாருக்காக )
5.      அமர்க்களம்                              ( உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு ) 
6    ஜெயம் கொண்டான்               (  அதை கூடவா நீ மறந்து விட்டாய் )
7.     தைப்  பொங்கல்                          ( தானே சதிராடும் மாலை வெயில் வேளை) 
8.     குல விளக்கு                               ( கொண்டு வந்தால் அதை கொண்டு வா வா)
9.     பஞ்ச தந்திரம்                             ( வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்  )
10.   மயக்கம் என்ன                         ( நான் சொன்னதும் மழை வந்துச்சா)
11.   நீ தானே என் பொன் வசந்தம்       ( என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்)
12.   சிங்கம்                 ( என்  இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே) 
13.   ஜீன்ஸ்                   ( கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை) 
 

மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு      
அதை தானே  கொண்டு வந்தேன் நான் என்னோடு என் கண்ணோடு          

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:     நெஞ்சிருக்கும் வரை     


எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, யோசிப்பவர், முத்து,  10அம்மா     

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.