Tuesday, September 3, 2013

எழுத்து வரிசை - 36

 
எழுத்து வரிசை புதிர் - 36 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1   காப்பவன்   (5)                                                                        - 1997   
2   சென்னை மாநகரம் (10)                                                       - 2010
3   புன்சிரிப்பு ராஜா   (4,4)                                                           - 1986   
4   விநாயகர் வீதி கோடி மனை   (5,2,3,2)                               - 2011
5   கண்ணனின் கரிய முகம் தோன்றுமிடம்   (4,5)                - 2000   

இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
 
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை: (5)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 35 க்கான விடைகள்:
 
1 பசு பால் இன்றி பாரத்தால் ஆண்டவரும் கலங்கி ஆடும் ஆக்ரோஷமான நடனம் (3,5) - 1978   -  ருத்ர தாண்டவம் 
2 பாதி சாதித்ததும் திரும்பிய புலிகள் நடுவில் அறிவாளிகள் (7) - 1968                                          -  புத்திசாலிகள் 
3 வெதுவெதுப்பாக்கியபின் சுடும் கருவி (5) - 2012                                                                            -  துப்பாக்கி 
4 குட்டி ஜான்சனுக்கு தந்தை? (4,2) - 2001                                                                                           -  லிட்டில் ஜான் 

5 வீரப்பனுடன் காட்டுப் போர்? (2,4) -2013                                                                                           -  வன யுத்தம் 

எழுத்து வரிசை புதிர் விடை -         புலி வருது 
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, 10அம்மா, மதுமதி 


இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

 
ராமராவ்

3 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. மதுமதி,

    விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete