Sunday, September 22, 2013

எழுத்துப் படிகள் - 41


எழுத்துப் படிகள் - 41 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவகுமார் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (4,3)  சிவகுமார் நடித்ததே.
 
எழுத்துப் படிகள் - 41 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
 
1.  தசரதன் 
2.  ஏணிப்படிகள் 
3.  ஆணிவேர் 
4.  கற்பூர தீபம் 
5. உனக்காகவே வாழ்கிறேன்    
6.  சாமந்திப்பூ 
7.  கண்மணி ராஜா 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு :  

இறுதி விடைக்கான திரைப்படம் வெளியான வருடம் :   1982

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 40 க்கான குறிப்புகளின் விடைகள்:
 
1. பன்னிரண்டில் ஒன்று. அந்தமும் ஆதியும் ஒன்று (5) - (1998)      -   சிம்மராசி 
2. போலீஸ் ஸ்டேஷன் (3,4) - (1991)                                                                -    காவல் நிலையம் 
3. சேர சோழ பாண்டியர் (5) - (1998)                                                                -    மூவேந்தர் 
4. சுயகௌரவமுள்ளவன் (5) - (2004)                                                              -    மானஸ்தன்  
5. ஜனகனின் மகளை மணந்த தசரதனின் மைந்தன் (3,3) - (1997)     -    ஜானகி ராமன் 
6. இளவேனிற் பருவத்தில் புள்ளினம் (4,2,3)
- (1991)                           -    வசந்த கால பறவை  
7. விளங்காத மர்மம் (4,3) - (1990)                                                                    -    புரியாத புதிர் 

இறுதி விடை:            சிவந்த மலர்             

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav,  முத்து, மதுமதி, 10அம்மா.

இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

 
ராமராவ்

3 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. மதுமதி,

    விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete