சொல் அந்தாதி - 2 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. உத்தம புத்திரன் - காத்திருப்பான் கமலக் கண்ணன்
2. வெண்ணிற ஆடை
3. பணமா பாசமா
4. கந்தன் கருணை
5. அதிசயத் திருடன்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் அந்தாதி - 1 புதிருக்கான விடைகள்:
1. ரோஜா - சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
2. ஆனந்தம் - ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே
3. இதய வீணை - ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தால் என்ன
4. வெண்ணிற ஆடை - என்ன என்ன வார்த்தைகளோ சின்னவிழி பார்வையிலே
5. சிங்கம் - II - புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, 10அம்மா, மதுமதி
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
மதுமதி,
ReplyDeleteஎல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.