சொல் வரிசை - 40 புதிருக்காக, கீழே 6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. செங்கோட்டை ( ------ ------- பாரத பண்பாடு மேலை நாடும் போற்றிடும் பண்பாடு)
2. மௌன ராகம் ( ------ ----- செல்லாதே வா எந்நாளும் உன் செவ்வானம் நான் )
3. தியாகம் ( ------- ------ பூவே பூந்தென்றல் காற்றே )
4. புன்னகை மன்னன் ( ------- ------- கருவில் பிறந்தது ராகம் )
5. அன்பே சிவம் ( ------- ------- புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் )
6. நினைவுகள் மறைவதில்லை ( ------- ------ பூவே மடியில் ஆட வா )
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 39 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்