Monday, September 9, 2013

சொல் அந்தாதி - விளக்கம்


வணக்கம் நண்பர்களே,
 
திரைஜாலத்தில், சொல் வரிசை, எழுத்துப் படிகள், எழுத்து வரிசை, எழுத்து அந்தாதி முதலான ஜாலங்களை அடுத்து வெளிவரப் போகும் புதிய ஜாலம்  "சொல் அந்தாதி".
 
சொல் அந்தாதி திரைப்படப் பாடல்களைப் பற்றியது. ஒரு பாடல்  (திரையில் / இசைத்  தகட்டில்) எந்த சொல்லோடு முடிகிறதோ, அந்த  முடிவுச்சொல்  அடுத்த பாடலின் தொடக்கச் சொல்லாக அமையும். 2-வது பாடலின்  முடிவுச் சொல், 3-வது பாடலின் தொடக்கச் சொல்லாக அமையும். 3-வது பாடலின்  முடிவுச்சொல்  4-வது பாடலின்  தொடக்கச்  சொல்லாக அமையும். இப்படியே  தொடர்வது தான் சொல் அந்தாதி.   
 
சொல் அந்தாதி புதிரில்   5 (ஐந்து)  அல்லது  அதற்கு  மேற்பட்ட திரைப் படங்களின் பெயர்கள்  ஒரு  குறிப்பிட்ட  வரிசையில்  கொடுக்கப் பட்டிருக்கும். முதலாவது  திரைப்படத்தில் இடம்பெறும் பாடலின்  முதல்  வரிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
 
புதிரில் கண்டு பிடிக்க வேண்டியது: சொல்   அந்தாதி  விதிகளின்படி  எஞ்சிய   படங்களில் இடம்பெறும்  பாடல்களின் முதல் வரிகளை.
 
கீழே ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
 
     திரைப்படம்                        பாடல் வரிகள்                                    முடிவுச்சொல் 
 
1. சரஸ்வதி சபதம்                             உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி                       கண்ணாடி  
2. மங்காத்தா                                       கண்ணாடி நீ கண்ஜாடை நான்                                  நான்  
3. சிறுத்தை                                          நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பிள்ள              ராஜா 
4. வஞ்சிக்கோட்டை வாலிபன்         ராஜா மகள் ரோஜா மலர்                                           நிறைவேறுமா  
5. காத்தவராயன்                                நிறைவேறுமா எண்ணம் நிறைவேறுமா                  ----- 
 
புதிரில் கண்டுபிடிக்க வேண்டிய  திரைப்படப்  பாடல்களின் முதல்  வரிகளைக்   கண்டுபிடிப்பது  எப்படி  என்று  கீழே கொடுத்திருக்கிறேன்.
 
1. பாடல்களை முழுவதும் இறுதி  வரை  கேட்டால்  அன்றி,  முடிவுச் சொல்லை கண்டு பிடிப்பது கடினம். ஆகையால், முதலில்  கொடுத்திருக்கும்  பாடலை  முழுவதும் இறுதி வரை கேட்கவும். பாடலைக் கேட்க,
www.inbaminge.com / music.cooltoad.com / www.hummaa.com  websiteகளில் ஏதாவது  ஒன்றில் கேட்கலாம். இவை எவற்றிலும்  பாடல்  இல்லை யென்றால், Google   Search சென்று, பாடலின் முதல்  வரிகளை ஆங்கிலத்தில்   அல்லது  தமிழில்  Type  செய்தால்   youtubeல்  வீடியோவுடன்  பாடலை  கேட்கலாம். முயற்சித்தால், கண்டிப்பாக  ஏதேனும் ஒரு வழியில் பாடலை முழுவதும்  கேட்டு பாடலின்  முடிவுச்சொல்லை கண்டுபிடிக்கலாம்.
 
2.   அந்த முடிவுச் சொல்லுடன் தொடங்கும்  இரண்டாவது பாடலை  கண்டு பிடிக்க    வேண்டும்.  இதற்கும்  மேற்சொன்ன  websites  பயன்படுத்தலாம். website www.thiraipaadal.com  கூட  பயன்படுத்தலாம். மேலே  கூறியபடி  இந்த  பாடலையும் முழுவதுமாக கேட்டு, முடிவுச்சொல்லை கண்டு பிடிக்கலாம்.
 
3.   இதே போன்று எஞ்சிய படப் பாடல்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.
 
4. திரைப்படப் பெயர்கள்,  பாடல்களின்   முதல்   வரிகள்   இவற்றை  விடைகளாக   அனுப்பவேண்டும்.
 
5.   விடைகளை  கண்டு பிடிப்பதிலோ அல்லது, பாடல்களை  கேட்க முடிய வில்லை   என்றாலோ, இ-மெயில் அனுப்பினால், என்னால் உதவ முடியும்.
 
குறிப்பு:       
 
தொகையறா  வரிகள்,  தொடக்கத்திலும்  முடிவிலும்  வரும்   ஹம்மிங்   (லா லா, ஓ, ஓஹோ, ஆஹா, ஆராரோ  போன்றவை) தவிர்க்கப் படவேண்டும். பல்லவியில் தொடங்கும் சொற்களும், வரிகளும் மட்டுமே புதிரில் அமையும்.
 
இந்த சொல் அந்தாதி புதிர் மூலமாக, நண்பர்கள், பல அரிதான திரைப்படப் பாடல்களை முழுவதுமாக  கேட்டு  ரசிக்க  முடியும் என்று  நம்புகிறேன். அதே  சமயம், தமிழ் திரைப்படங்களில் மறைந்திருக்கும் ஜாலங்களையும்  ரசிக்க முடியும்.       
 
நண்பர்கள் இந்த  சொல் அந்தாதி  புதிரிலும் பெருமளவில் பங்கேற்குமாறு வேண்டுகிறேன். மேலும்  இந்த  புதிரைப்  பற்றி  உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள்,  நண்பர்கள்  இவர்களுடனும்  பகிர்ந்து கொள்ளுமாறு  வேண்டுகிறேன்.  

சொல் அந்தாதி பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னோட்டம் (Comments) மூலமாக நீங்கள் அனுப்பலாம்.                
          
நன்றியுடன்,
 
ராமராவ் 
 

No comments:

Post a Comment