எழுத்து வரிசை புதிர் - 38 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 தாயக்கட்டையில் விழும் அதிகப்படியான எண் (3,5) - 1982
2 பர்மாவிலிருந்து வந்த கிருஷ்ண பக்தை (4,2) - 1956
3 கேடு நினைக்காத அம்மாயிராத பெண் பெரிய மனுஷியாயிட்டா (3,5,5) - 1980
4 பணக்கார கடவுள் (4,4) - 1973
2 பர்மாவிலிருந்து வந்த கிருஷ்ண பக்தை (4,2) - 1956
3 கேடு நினைக்காத அம்மாயிராத பெண் பெரிய மனுஷியாயிட்டா (3,5,5) - 1980
4 பணக்கார கடவுள் (4,4) - 1973
5 ஒவ்வொரு செயலுக்கும் இணையான எதிர் செயல் உண்டு (6,4,2) - 2009
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
குறிப்பு:
எழுத்து வரிசை விடை: (5)
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 37 க்கான விடைகள்:
1 அன்னை புதல்விக்கு அணிவித்த மாங்கல்யம் (2,5,4,2) - 1959 - தாய் மகளுக்கு கட்டிய தாலி
2 திக்கு தெரியாது வழி தவறிய புள்ளினங்கள் (2,3,5) - 1979 - திசை மாறிய பறவைகள்
3 சகோதரிக்கென ஒரு பாட்டு (6,3) - 1983 - தங்கைக்கோர் கீதம்
4 ஆண்டவனைப் பார்த்தேன் (5,4) - 1963 - கடவுளைக் கண்டேன்
2 திக்கு தெரியாது வழி தவறிய புள்ளினங்கள் (2,3,5) - 1979 - திசை மாறிய பறவைகள்
3 சகோதரிக்கென ஒரு பாட்டு (6,3) - 1983 - தங்கைக்கோர் கீதம்
4 ஆண்டவனைப் பார்த்தேன் (5,4) - 1963 - கடவுளைக் கண்டேன்
5 நடுத்தர வர்க்கத்து லட்சுமி மணாளன் (3,3,4) - 2001 - மிடில் கிளாஸ் மாதவன்
எழுத்து வரிசை புதிர் விடை - தகதிமிதா
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, மதுமதி, 10அம்மா
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
ராமராவ்
மதுமதி,
ReplyDeleteஎல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.