வணக்கம் நண்பர்களே,
திரை ஜாலம் வலை தொடங்கப்பட்டு இந்த வாரத்துடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. திரைஜாலத்தில் கடந்த ஒரு ஆண்டில் 126 பதிவுகள் வெளிவந்துள்ளன. இவற்றில் 121 புதிர்கள் வெளிவந்துள்ளன.
சொல்வரிசை புதிர்கள் = 38
எழுத்துப் படிகள் புதிர்கள் = 38
எழுத்து வரிசை புதிர்கள் = 35
எழுத்து அந்தாதி புதிர்கள் = 10
திரைஜாலம் புதிர்களை, வார்த்தை விளையாட்டு குழுவிலிருக்கும் அனைவருக்கும் அனுப்பி வருகிறேன். மேலும் "தமிழ் மணம்" மற்றும் "இன்ட்லி" வலைத் திரட்டிகளிலும் இணைத்து வருகிறேன்.
திரைப்படங்களைப் பற்றியும், திரைப்படப் பாடல்களைப் பற்றியும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள நண்பர்கள் பலரும் மேற்கண்ட திரைஜாலம் புதிர்களில் பங்கேற்று சரியான விடைகளை அனுப்பி வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கெல்லாம் எனது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைப்படங்களைப் பற்றியும், திரைப்படப் பாடல்களைப் பற்றியும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள நண்பர்கள் பலரும் மேற்கண்ட திரைஜாலம் புதிர்களில் பங்கேற்று சரியான விடைகளை அனுப்பி வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கெல்லாம் எனது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள் பற்றி அதிக ஆர்வமுள்ளவர்கள் பலருக்கு திரைஜாலம் புதிர்கள் பற்றி தெரியாமலிருக்கலாம். அவர்கள் உங்களது நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ அல்லது குடும்பத்தினராகவோ இருக்கலாம். அவர்களுக்கும் திரை ஜாலம் புதிர்கள் பற்றி சொல்லுங்கள். அவர்களும் இவற்றில் பங்கேற்க வாய்ப்பு அமையலாம்.
புதிர்களில், உங்கள் கருத்துப்படி, சுவாரசியமான புதிர் எது, கடினமான புதிர் எது என்று எழுதி அனுப்பலாம். மேலும், கொடுக்கப்படும் குறிப்புகள் போதுமானதாக உள்ளனவா, சுவையாக உள்ளனவா என்ற உங்களது கருத்துக்களையும் எழுதி அனுப்பவும்.
உங்களது கருத்துக்களை, பின்னூட்டமாக (Comments) மட்டும் அனுப்புமாறு வேண்டுகிறேன். e-MAIL மூலமாக அனுப்ப வேண்டாம். பின்னூட்டமாக அனுப்பினால் மட்டுமே உங்கள் கருத்துக்களை அப்படியே பிரசுரிக்க இயலும்.
திரைஜாலத்தில் இன்னொரு ஜாலம், புதிர்களாக "சொல் அந்தாதி" என்ற தலைப்பில் வெளிவரப் போகின்றது. சொல் அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் விரைவில் வலைப்பதிவில் வெளிவரும். நண்பர்கள் அதிக அளவில் இந்த புதிய திரைஜாலம் புதிரிலும் பங்கேற்று விடைகளை அனுப்பி என்னை மேலும் ஊக்குவித்து ஆதரவு அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
திரைஜாலம் புதிர்கள் தொடர்ந்து வெளிவரும் அதே வேளையில் புதிதாக "திரைக்கதம்பம்" என்ற தலைப்பில் வலைப்பிரிவு ஒன்று தொடங்கப் போகிறேன். இந்த புதிய வலைப் பிரிவில், நண்பர்கள் பங்கேற்கும் வகையில், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், திரைப்படக் கலைஞர்கள் பற்றிய கொஞ்சம் புதுவிதமான புதிர்கள், மற்றும் திரை குறுக்கெழுத்துப் புதிர்கள், வெளிவரப்போகின்றன. திரைக்கதம்பம் புதிர்களிலும் நண்பர்கள் அதிக அளவில் பங்கேற்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
நன்றியுடன்,
ராமராவ்
nice effort, not how u manage to collect these things, from very old movies to recent movies, just amazing...
ReplyDeleteஓராண்டு நிரம்பியமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் தங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவீ ஆர் பாலகிருஷ்ணன்
திரைஜாலத்திற்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteபழைய படங்கள் முதல் புது படங்கள் வரை மிக நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.திரைஜாலபுதிர்கள் விறுவிறுப்பாக இருக்கின்றன.தற்சமயம் சொல் அந்தாதி புதிரை அவிழ்க்கவும் ஆர்வமாகவே இருக்கிறேன்.
திரு. ராமராவ்,
ReplyDeleteதிரைப்படங்கள் பெயரும், பாடல்களும் கொண்டே பல்விதமான புதிர்கள்
இயற்றி ஓராண்டு காலம் எங்களை எல்லாம் மகிழ்வித்து வந்ததற்கு நன்றியும் பாராட்டுக்களும்! பல புதிய படங்களும், நடிக நடிகையரும் பாடல்களும் உங்கள் புதிர்கள் மூலம் அறிந்து கொண்டேன். இன்னும் பல ஆண்டுகள் மேலும் புதிய புதிர்கள் இயற்ற வாழ்த்துகிறேன்.