சொல் வரிசை - 39 புதிருக்காக, கீழே 6 (ஆறு ) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அவள் தந்த உறவு ( ------ ------- என் நெஞ்சம் இனிக்கின்றது )
2. கேள்வியும் நானே பதிலும் நானே ( ------- -------- வரைந்த ஓவியம் )
3. அவசர கல்யாணம் ( ------- -------- முகம் பார்க்க வேண்டும் )
4. நேற்று இன்று நாளை ( ------- ------- பழகும்போது நெஞ்சம் ஒன்றாகும் )
5. களத்தூர் கண்ணம்மா ( ------- ------- உருகி நின்றாள் அன்பு தந்தாளே )
6. மல்லிகா ( ------- ------ ------ மாளிகையின் வாசலுக்கே )
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 38 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்