எழுத்துப் படிகள் - 39 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (6) சிவாஜி கணேசன் நடித்ததே.
மேலும் வழக்கமான குறிப்புகளுடன், அந்த திரைப்படங்கள் வெளியான வருடங்களும் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தாயின் கட்டளை (5,2) - (1958)
2. தம்பதிகளின் இல்வாழ்க்கை (6) - (1987)
3. நாங்கள் அவதரித்த பூமி (2,4,2) - (1977)
4. கல்லாத அறிவாளி (5,2) - (1960)
5. முதலிடத்திற்கு பரிசு (9) - (1974)
6. இளவேனிற் பருவத்தில் ஒரு தினம் (7,2,2) - (1982)
6. இளவேனிற் பருவத்தில் ஒரு தினம் (7,2,2) - (1982)
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், இதே வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
இறுதி விடைக்கான திரைப்படத்தில் ஜோடி பானுமதி.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 38 க்கான குறிப்புகளின் விடைகள்:
1. கடிதங்கள் தருபவனின் சகோதரி (6,3) (1970) - தபால்காரன் தங்கை
2. பெண்கள் நெஞ்சம் குறையாத சொத்து (5,4,4,4) (1962) - மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்
3. மண்ணுலகின் விண்ணுலக தேவதை? (3,3) (1958) - பூலோக ரம்பை
4. தாய்வழி முறைப்பெண் (3,3) (1955) - மாமன் மகள்
5. வரவிருக்கும் பருவம் (6) (1970) - எதிர் காலம்
6. பாசத்திற்கொரு தமையன் (6,4) (1971) - அன்புக்கோர் அண்ணன்
6. பாசத்திற்கொரு தமையன் (6,4) (1971) - அன்புக்கோர் அண்ணன்
இறுதி விடை: தங்க மலர்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, யோசிப்பவர், முத்து, மதுமதி.
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
யோசிப்பவர்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
மதுமதி,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.