Sunday, June 30, 2013

எழுத்துப் படிகள் - 30



எழுத்துப் படிகள் - 30 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும்   விஜயகாந்த்  நடித்தவை.   இறுதி விடைக்கான  திரைப்படமும்  (6)   விஜயகாந்த்  நடித்ததே.  
 
மேலும் வழக்கமான குறிப்புகளுடன்,   பிரபலமான பாடல் ஒன்றும் அடைப்புக் குறிகளுக்குள்   கொடுக்கப்பட்டிருக்கும்.  அந்தப் பாடல் அந்த திரைப்படத்தில் இடம் பெறும்  பாடலாகவோ அல்லது திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்க உதவுவதாகவோ இருக்கும். 
 
1.   இளைய கொங்கு வேளாளர்?    (3,5)
       (கண்ணுபடப் போகுதய்யா )   
2.   இது நான்குமறை தீர்ப்பு  (5,6)    
        (அம்பிகையை சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம் )  
3.   மாதர் மயங்கிய  பாண்டவர் (3)
       (செம்பருத்தி பூவுக்கு சேலை என்ன செல்லம்மா)
4.   நிறைவான நெஞ்சம்  (4,3)
       (ஒற்றுமையே நமக்கு உயிர்நாடி அது உள்ளத்திலூறும் அன்பை காட்டிடும் கண்ணாடி )
5.   இனிமையான இசை (3,3)
            (அம்மா என்று நீ அழைத்தால்  ----- -----  பொழியுமடா ) 
6.   ஆளும் சர்க்கார்  (6)
       (குயில்கள் வாழும் கலைக்கூடம் கொண்டது எனது ----- )
 
 
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின்,  இதே  வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
    
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்

 
குறிப்பு:
 
விடைக்கான திரைப்படத்தில் விஜயகாந்த் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார்.  
 
 
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 29 க்கான குறிப்புகளின் விடைகள்:
 
1.   பிரதிபலிக்கும் சப்தம்   (4)                                   -   எதிரொலி  
      (புதிய வானம் புதிய வானம், புதிய பூமி புதிய பூமி )   
2.   தர்மத்தின் பிம்பம்   (4,3)                                       -    நீதியின் நிழல் 
      (குத்து  விளக்கோ ஒன்று  வெள்ளிக்குடமோ ரெண்டு )  
3.   மறு பிறவி (3,4)                                                         -    புனர் ஜென்மம் 
      (எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை )
4.   மதுவும் தலையற்ற தபாலும்  (3,3)               -     தேனும் பாலும் 
      (மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கள மங்கை மீனாட்சி  )
5.   எனக்கு விருப்பமான வேந்தனே (2,2,3) -    என் ஆசை ராசாவே       
          (என் ஆசையும் நிறைவேறிடும்     ராசாவே உன்னை நம்பி  இந்த ரோஜாப்பூ ) 
6.   நாங்கள் உதித்த பூமி   (2,4,2)                            -      நாம் பிறந்த மண் 
       (ஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே )
7.   முரட்டு ரத்தினம்  (4,3)                                          -     முரடன் முத்து 
       (தாமரைப்பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே  )
 
 
இறுதி விடை:    எதிர்பாராதது          
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :  Madhav,  Suji, சாந்தி நாராயணன், முத்து, வைத்தியநாதன்       
 
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
 

ராமராவ்

5 comments:

  1. 10அம்மா,

    தங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. முத்து,

    எல்லா சரியான விடைகளை கண்டுபிடித்தமைக்கு பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. Suji,

    தங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. Madhav,

    தங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. யோசிப்பவர்,

    தங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete