வணக்கம் நண்பர்களே,
திரை ஜாலத்தில், சொல்
வரிசை, எழுத்துப் படிகள், எழுத்து வரிசை இவைகளுக்கு அடுத்த ஜாலம்: எழுத்து அந்தாதி.
இதுவும் நண்பர்கள்
பங்கேற்கும் வகையில் ஒரு புதிராக வலைப்பதிவில் வெளிவரவிருக்கிறது.
எழுத்து அந்தாதி பற்றியும்
புதிர் பற்றியும் ஒரு விளக்கம்:
எழுத்து அந்தாதிப் புதிரில்
ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான
குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். குறிப்புகளின் உதவியுடன் அந்த
திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்கவேண்டும்.
முதல் படத்தின் கடைசி
எழுத்தைக்கொண்டு 2-வது படத்தின் பெயர் துவங்கும். அதேபோல், 2-வது எழுத்தின் கடைசி
எழுத்தைக்கொண்டு 3-வது படத்தின் பெயர் துவங்கும். 3-வது படத்தின் கடைசி எழுத்து,
4-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும். இப்படியாக, கடைசி திரைப்படத்தின் கடைசி
எழுத்தைக்கொண்டு, முதல் திரைப்படத்தின் பெயர் துவங்கும். இதுவே எழுத்து அந்தாதி.
உதாரணமாக, கீழே ஒரு
குறிப்பிட்ட வரிசையில் ஆறு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மாயாவி 2. விடியும்வரை காத்திரு
3. ருசி
4. சிக்கு புக்கு
5. குழந்தைக்காக
6. கண்ணா நலமா
இந்த ஆறு திரைப்படங்களின் கடைசி எழுத்துக்களையும் முதல் எழுத்துக்களையும் கவனித்தால், எழுத்து அந்தாதி பற்றிய விளக்கம் தெளிவாகும்.
இன்னொன்றையும் கவனிக்கலாம். எழுத்து அந்தாதியில் இடம் பெறும் திரைப்படங்களின் பெயர்கள் எந்த ஒரு உயிரெழுத்தைக்கொண்டோ அல்லது எந்த ஒரு மெய்யெழுத்தைக்கொண்டோ துவங்காது, முடியாது. உயிர்மெய்யெழுத்தைக்கொண்டு தான் துவங்கும். முடியும்.
நண்பர்களிடமிருந்து எழுத்து அந்தாதி பற்றிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
எழுத்து அந்தாதி புதிர் அடுத்த பதிவிலிருந்து வெளியாகும்.
நன்றியுடன்,
ராமராவ்
Interesting. expecting your puzzle soon
ReplyDeleteshanthi
Seems very interesting... Waiting for the first one in this series :)
ReplyDeleteஎழுத்து அந்தாதி கற்பனையே வித்தியாசமாக இருக்கிறது. சுவாரஸ்யமான இந்தப் போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அவசியம் நான் பங்கெடுப்பேன் இதில்.
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
ReplyDelete