Tuesday, June 4, 2013

எழுத்துப் படிகள் - 27



எழுத்துப் படிகள் - 27 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:


அனைத்து திரைப்படங்களும்   சிவாஜி கணேசன்   நடித்தவை.   இறுதி விடைக்கான  திரைப்படமும்  (6)  சிவாஜி கணேசன்   நடித்ததே.  

 
மேலும் வழக்கமான குறிப்புகளுடன்,   பிரபலமான பாடல் ஒன்றும் அடைப்புக் குறிகளுக்குள்   கொடுக்கப்பட்டிருக்கும்.  அந்தப் பாடல் அந்த திரைப்படத்தில் இடம் பெறும்  பாடலாகவோ அல்லது திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்க உதவுவதாகவோ இருக்கும். 
 
1.   விடாமுயற்சியால் செயல் முடித்தல் (3)
      (ஓ வானம்பாடி உன்னை நாடி  எங்கும்  தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி )   
2.   பாஞ்சாலங்குறிச்சி மன்னன்  (2,4,3,4)
      (இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே )  
3.   சிரம் தாழ்த்தா மன்னன்   (6)
      (வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா )
4.    நற்குடியில் பிறந்த, கண்ணனின் கோபிகை  (5,2)
      (உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை )
5.   அரசியான, M.L. வசந்தகுமாரியின் தாயார் (2,5)
          (ஆண்டவனே இல்லையே தில்லை தாண்டவனே உன்போல் தாரணி மீதினிலே ) 
6.    நிறைவான இதிகாசம் (5,5)
       (பாதுகையே துணையாகும் எந்நாளும்  )

 
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின்,  இதே  வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
    
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்







குறிப்பு:

எழுத்துப் படிகள் - 27க்கு இறுதி விடைக்கான திரைப்படத்தின் கதைக்கு தொடர்புடையவை:
1. பம்மல் சம்பந்த முதலியார்
2. ராஜமுந்திரியில் இருக்கும் சித்ராங்கி பேலஸ்
 
 
 


அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 26 க்கான குறிப்புகளின் விடைகள்:


1.   பல்லவன் . (4,4)                                               -  காஞ்சித் தலைவன் 
      (ஒரு கோடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா )   
2.   முத்து, மாணிக்கம், மரகதம், தங்கம் ........    (7) -  நவரத்தினம்  
      (மானும் ஓடி வரலாம் மாநதியும் ஓடி வரலாம் )  
3.   லவ்வர்ஸ் வண்டி   (3,4)                                       -  காதல் வாகனம் 
      (நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு )
4.   மெய்யிழந்த பலிக்கு காவலே மாற்று தேசம்  (6) - குலேபகாவலி 
      (மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ )
5.   செல்வந்தர் வீட்டோர் (5,5)                            - பணக்கார குடும்பம் 
          (பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது ) 
6.    எனது தமையன்   (2,4)                                  - என் அண்ணன் 
       (நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா )

 
 
இறுதி விடை:   காவல்காரன்       
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :  முத்து,  Madhav,  Suji, வைத்தியநாதன், சாந்தி நாராயணன்      
 
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
 

ராமராவ்

5 comments:

  1. Madhav,

    எல்லாம் சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. சாந்தி நாராயணன்,

    உங்களது எல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. வைத்தியநாதன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  4. Suji,

    சரியான விடைகளை அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete
  5. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி.


    ReplyDelete