எழுத்துப் படிகள் - 29 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (7) சிவாஜி கணேசன் நடித்ததே.
மேலும் வழக்கமான குறிப்புகளுடன், பிரபலமான பாடல் ஒன்றும் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடல் அந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடலாகவோ அல்லது திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்க உதவுவதாகவோ இருக்கும்.
1. பிரதிபலிக்கும் சப்தம் (4)
(புதிய வானம் புதிய வானம், புதிய பூமி புதிய பூமி )
2. தர்மத்தின் பிம்பம் (4,3)
(குத்து விளக்கோ ஒன்று வெள்ளிக்குடமோ ரெண்டு )
3. மறு பிறவி (3,4)
(எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை )
4. மதுவும் தலையற்ற தபாலும் (3,3)
(மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கள மங்கை மீனாட்சி )
5. எனக்கு விருப்பமான வேந்தனே (2,2,3)
(என் ஆசையும் நிறைவேறிடும் + ராசாவே உன்னை நம்பி இந்த ரோஜாப்பூ )
6. நாங்கள் உதித்த பூமி (2,4,2)
(என் ஆசையும் நிறைவேறிடும் + ராசாவே உன்னை நம்பி இந்த ரோஜாப்பூ )
6. நாங்கள் உதித்த பூமி (2,4,2)
(ஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே )
(தாமரைப்பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே )
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், இதே வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
விடைக்கான திரைப்படத்தில் பத்மினி சிவாஜி கணேசனின் காதலியாகவும், சித்தியாகவும் (அப்பாவின் இரண்டாவது மனைவி) நடித்திருந்தார்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 28 க்கான குறிப்புகளின் விடைகள்:
1. நீலாம்பரியின் எதிரி (5) - படையப்பா
(மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் )
2. ராஜேஷ்குமாரின் நாவல் (10,4) - வணக்கத்துக்குரிய காதலியே
(அடியேனைப் பாரம்மா பிடிவாதம் ஏனம்மா )
3. பரபரக்கும் கைகள் (5,5) - துடிக்கும் கரங்கள்
(மேகம் முந்தானை ஆடுது முன்னாலே )
4. காவடி பக்தன் ஆக மாறியவன் (7) - படிக்காதவன்
(ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி )
5. பட்டாளத்தான் (3,3) - ராணுவ வீரன்
(சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும் )
6. நீதிக்கு முதல்வன் (6,4) - தர்மத்தின் தலைவன்
(சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும் )
6. நீதிக்கு முதல்வன் (6,4) - தர்மத்தின் தலைவன்
(தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு )
இறுதி விடை: பணக்காரன்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, Suji, 10அம்மா, நாகராஜன், சாந்தி நாராயணன்
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி.
Suji,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
வைத்தியநாதன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
சாந்தி,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி.பராட்டுக்கள். நன்றி.