Monday, June 24, 2013

எழுத்து வரிசை - 27



எழுத்து வரிசை புதிர் - 27 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

 

1 நெருப்பாய் செயல் புரிய வேண்டும் சித்தார்த் (2,2,5,3)  
2 கண்மாயில் சிக்கிய சரத்குமார் (2)
3 விஷால் நடந்து கொள்ளும் முறை  (3) 
4 பேரறிவாளன் பார்த்திபன்  (5)
5 அஜித் ஆடிய சூதாட்டம்  (5)
6 பூமியே தோன்றியது தனக்காக என பெருமிதப்படும் சத்யராஜ் (4,5,5)         
 
 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
 
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
  
குறிப்பு:
 
எழுத்து வரிசைக்கான விடை  (3,3)  கல்யாண்குமார், முத்துராமன் இணைந்து நடித்த திரைப்படம்.      .  :
  
 
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 26 க்கான விடைகள்: 
 

 
1 அஞ்சலிதேவி பயணிக்கும் நகர பேருந்து (3,2)                                        -  டவுன் பஸ் 
2 விஷால் பங்கேற்கும் யுத்தம் (3)                                                                -  சமர் 
3 எமது குழந்தை என பெருமிதப்படும் ரவிச்சந்திரன், பாரதி  (3,3)            -  எங்க பாப்பா 
4 பிரஷாந்த் - மீனா தரும் அதிர்ச்சி (2)                                                         -  ஷாக்   
5 அர்ஜுனனின் தமையனே விக்ரம்  (2)                                                       -  பீமா 

 
 
எழுத்து வரிசை புதிர் விடை -         பாஸ்மார்க்        
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, Suji, வைத்தியநாதன், 10அம்மா       
 
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

ராமராவ்

4 comments:

  1. Madhav,

    தங்கள் விடைகள் எல்லாம் சரியே. பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  2. நாகராஜன்,

    தங்கள் விடைகள் எல்லாம் சரியே. பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  3. 10அம்மா,

    உங்கள் சரியான விடைகளுக்கு நன்றி. பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. முத்து,

    உங்கள் விடைகள் எல்லாம் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete