கீழே 7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. டிக் டிக் டிக் ( ------ ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் )
2. முத்தான முத்தல்லவோ ( ------ பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் )
3. நீல மலர்கள் ( -------- ஒரு பூ மலரும் அல்லிப்பூ )
4. ஓரம் போ ( ------- என்ன மாயம் இது எதுவரை போகும் )
5. 7-ம் அறிவு ( -------- அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ )
6. ஆனந்த ஜோதி ( -------- இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா )
7. வாழ்க்கை ( -------- மாறலாம் நம் காதல் மாறுமா )
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல், சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 29 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்