Monday, November 25, 2013

சொல் வரிசை - 48


சொல் வரிசை - 48   புதிருக்காக, கீழே  8 (எட்டு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
1.   பச்சை விளக்கு  ( -----  -----  ----- ஒன்று சொல்ல நினைத்தாள்)
2.   தாண்டவம்   ( -----    ------   ------  -------   மறு பாதி கதவு நானடி
3.   ராமு   ( -----   -----   -----   இச்சை கிளி ரெண்டு )
4.   தாலாட்டு   ( -----  -----   -----  என் பொன்னுமணி நெனைச்சா கண்ணுலே முத்துமணி)
5.   சின்னப்பதாஸ்  ( -----   -----   -----   நீயும் நானும் வேறா)
6.   என் வழி தனி வழி   ( ------   -----   -----  நெஞ்சில் நிலைக்கும் அந்த உறவை )
7.  ஆயிரத்தில் ஒருவன்  ( -----   -----   -----   பார்வை எனது ஆடல்)
8.அன்னமிட்ட கை  ( ------   -----   -----  -----  தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 47  க்கான விடைகள்:


திரைப்படம்                                பாடலின் தொடக்கம் 
1. பகவதிபுரம் ரெயில்வே கேட் ( காலை நேர காற்றே வாழ்த்தி செல்லு மாலை சூடும் நாளை பார்த்து)
2. அவதாரம்   ( தென்றல் வந்து தீண்டும் போது  என்ன  வண்ணமோ மனசிலை )
3. கிழக்கு வாசல்  ( பாடி பறந்த கிளி பார்க்க மறந்ததடி  பூமானே )
4. ஆசை (1956)  ( வரும் காலம் நல்ல காலம்  புது வாழ்வு நாம் காணவே) 
5. காதோடுதான் நான் பேசுவேன்  ( ராகம் தாளம் பாவம் பாடல்  நான்கும் சேர்ந்தால் இசை வரும் )
6. யாரடி நீ மோகினி  ( ஒரு நாளுக்குள் எத்தனை கனவு   உன்  பார்வையில் விழுகிற பொழுது )
7. நெஞ்சில் ஒரு முள்  ( ராகம் புது ராகம்  இனி நாளும் பாடலாம் ) 
 

மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
காலை தென்றல் பாடி வரும்  
ராகம் ஒரு ராகம்                  

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:        உயர்ந்த உள்ளம்      
 
சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 
 
1.  மாதவ் மூர்த்தி 
2.  மதுமதி விட்டல்ராவ்
3.  முத்து சுப்ரமண்யம்   
 
இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

6 comments:

  1. 1. பச்சை விளக்கு - அவள் மெல்லச் சிரித்தாள்
    2. தாண்டவம் - ஒரு பத்தி கதவு நீயடி
    3. ராமு - பச்சை மரம் ஒன்று
    4. தாலாட்டு - குழந்தை பாடுறேன் கண்ணுமணி
    5. சின்னப்பதாஸ் - பாடும் பக்த மீரா
    6. என் வழி தனி வழி - பறவை காதல் பறவை
    7. ஆயிரத்தில் ஒருவன் - பருவம் எனது பாடல்
    8.. அன்னமிட்ட கை - பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா

    இறுதி விடை :
    அவள் ஒரு பச்சைக் குழந்தை பாடும் பறவை
    பருவம் பதினாறு
    - நீ ஒரு மகாராணி

    ReplyDelete
    Replies
    1. மாதவ்,
      உங்களது விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete

  2. 1.அவள் மெல்ல சிரித்தாள்
    2.ஒரு பாதி கதவு நீயடி
    3. பச்சை மரம் ஒன்று
    4 குழந்தை.பாடுறென் கண்ணுமணி
    5. பாடும் பக்த மீரா
    6.பறவை காதல் பறவை
    7.பருவம் எனது பாடல்
    8.பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா

    விடை;
    பாடல் ; அவள் ஒரு பச்சை குழந்தை பாடும் பறவை பருவம் பதினாறு
    படம்:நீ ஒரு மகாராணி

    ReplyDelete
    Replies
    1. மதுமதி,
      உங்களது விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  3. 1. பச்சை விளக்கு (அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்)
    2. தாண்டவம் ( ஒரு-பாதி-கதவு-நீயடி மறு பாதி கதவு நானடி)
    3. ராமு ( பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு )
    4. தாலாட்டு ( கொழந்தெ பாடுறேன் கண்ணுமணி என் பொன்னுமணி நெனைச்சா கண்ணுலே முத்துமணி)
    5. சின்னப்பதாஸ் ( பாடும் பக்த மேரா நீயும் நானும் வேறா)
    6. என் வழி தனி வழி ( பறவை காதல் பறவை நெஞ்சில் நிலைக்கும் அந்த உறவை )
    7. ஆயிரத்தில் ஒருவன் ( பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்)
    8.. அன்னமிட்ட கை (பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா)

    அவள் ஒரு பச்சை குழந்தை பாடும் பறவை பருவம் பதினாறு

    எஸ். பி. பி பாடியது; படத்தின் பெயர் கண்டு பிடிக்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. முத்து,
      உங்களது விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி. சொல் வரிசை விடைக்கான திரைப்படத்தின் பெயர் இ-மெயில் மூலமாக அனுப்பியதற்கு பாராட்டுக்கள்.

      Delete