Sunday, November 24, 2013

சொல் வரிசை - 47


சொல் வரிசை - 47   புதிருக்காக, கீழே  7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
1. பகவதிபுரம் ரெயில்வே கேட் ( -----  -----  ----- வாழ்த்தி செல்லு மாலை சூடும் நாளை பார்த்து சொல்லு )
2. அவதாரம்   ( -----    ------   ------  -------   என்ன  வண்ணமோ மனசிலை )
3. கிழக்கு வாசல்  ( -----   -----   -----   பாதை மறந்ததடி  பூமானே )
4. ஆசை (1956)  ( -----  -----   -----  ------  புது வாழ்வு நாம் காணவே) 
5. காதோடுதான் நான் பேசுவேன்  ( -----   -----   -----   -----  நான்கும் சேர்ந்தால் இசை வரும் )
6. யாரடி நீ மோகினி  ( ------   -----   -----  -----  உன்  பார்வையில் விழுகிற பொழுது )
7. நெஞ்சில் ஒரு முள்  ( -----   -----   -----   இனி நாளும் பாடலாம் ) 
 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 46  க்கான விடைகள்:


திரைப்படம்                                பாடலின் தொடக்கம் 

1. நியூ   ( காலையில் தினமும் கண் விழித்தால்  நான் கைதொழும் தேவதை அம்மா)
2. வீரத்திருமகன்  ( கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்  பதவி வேண்டுமா என் உதவி வேண்டுமா )
3. ஆயிரத்தில் ஒருத்தி ( கோயில் நல்ல கோயில்  தெய்வம் எந்தன் தெய்வம் )
4. உன்னைத்தான் தம்பி  ( மணி விளக்கே மாந்தளிரே மதுரசமே ரகசியமே கொலுவிருக்க நானிருக்க ) 
5. தெய்வமகன் கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா  கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா)
6. தங்க மனசுக்காரன் ( பூத்தது பூந்தோப்பு பாத்து பாத்து  போட்டது மாராப்பு தேடிப் பார்த்து )
7. மனதில் உறுதி வேண்டும் ( கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன் கண்கள் என்ன ) 
8. பயணங்கள் முடிவதில்லை ( மணி ஓசை கேட்டு எழுந்து  நெஞ்சில் ஆசை கோடி சுமந்து )  

மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
காலையில் கேட்டது கோயில் மணி 
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி                    


 இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:        செந்தமிழ் பாட்டு     
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் :  Madhav, முத்து, நாகராஜன், மதுமதி.  
 
இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

4 comments:

  1. மாதவ்,

    உங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. மதுமதி,

    விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. புதிருக்கான குறிப்புகளில் 6 வது திரைப்படம், பாடல் தவறுதலாக "புதுக்கோட்டையிலிருந்து சரவணன்" என்று கொடுத்திருந்தேன். தவறினை திரு முத்து அவர்கள் சுட்டிக்காட்டினார். அவருக்கு எனது பாராட்டுக்கள். நன்றி. தவறினை திருத்தி 6 வது திரைப்படம் "யாரடி நீ மோகினி" என்று மாற்றிவிட்டேன்.

    ReplyDelete