சொல் வரிசை - 46 புதிருக்காக, கீழே 8 (எட்டு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. நியூ ( ----- ----- ------ ------ நான் கைதொழும் தேவதை அம்மா)
2. வீரத்திருமகன் ( ----- ------ ------ ------- பதவி வேண்டுமா என் உதவி வேண்டுமா )
3. ஆயிரத்தில் ஒருத்தி ( ----- ----- ----- தெய்வம் எந்தன் தெய்வம் )
4. உன்னைத்தான் தம்பி ( ----- ----- ----- மதுரசமே ரகசியமே கொலுவிருக்க நானிருக்க )
5. தெய்வமகன் ( ----- ----- ----- ------- கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா)
6. தங்க மனசுக்காரன் ( ------ ----- ----- ------ போட்டது மாராப்பு தேடிப் பார்த்து )
7. மனதில் உறுதி வேண்டும் ( ----- ----- ----- ----- ----- உன் கண்கள் என்ன கண்கள் என்ன நீரோட்டமா )
8. பயணங்கள் முடிவதில்லை ( ----- ----- ------ ----- நெஞ்சில் ஆசை கோடி சுமந்து )
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
சொல் வரிசை - 45 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்
1. வேட்டைக்காரன் ( உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் )
2. குரு சிஷ்யன் ( கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன் காதல் நோயை கண்டு புடிச்சேன் )
3. எங்க வீட்டு பிள்ளை (நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்)
4. சக்கரவர்த்தி திருமகள் (ஆட வாங்க அண்ணாத்தே அஞ்சாதீங்க அண்ணாத்தே அங்கே இங்கே பாக்கிரது என்னாத்தே )
5. ஆசை முகம் ( என்னை காதலித்தால் மட்டும் போதுமா உன் கைகளில் வரவும் வேண்டுமா )
6. உன்னுடன் ( கண்டு பிடி அவனை கண்டு பிடி நெஞ்சை களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி )
7. நாயகன் ( நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம் )
8. வாழ்க்கை வாழ்வதற்கே ( ஆட காண்பது காவிரி வெள்ளம் அசைய காண்பது கன்னியர் உள்ளம் )
9. தெனாலிராமன் ( உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம்)
10. மீனவ நண்பன் ( பொங்கும் கடலோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை )
11. தூய உள்ளம் ( இன்ப லோக ஜோதி ரூபம் போலே நீல வான வீதி மேலே )
12. சிவகாசி (தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா )