Thursday, October 31, 2013

சொல் வரிசை - 45


சொல் வரிசை - 45  புதிருக்காக, கீழே 12 (பன்னிரண்டு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
1. வேட்டைக்காரன்  ( -----    -----    ------   ------  ------   உலகத்தில் போராடலாம் )
2. குரு சிஷ்யன்  ( -----    ------   ------  -------    காதல் நோயை கண்டு புடிச்சேன் )
3. எங்க வீட்டு பிள்ளை  ( -----   -----   -----   ------  இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார் )
4. சக்கரவர்த்தி திருமகள்  ( -----  -----   -----   -----  -----  அங்கே இங்கே பாக்கிரது என்னாத்தே ) 
5ஆசை முகம்  ( -----   -----   -----   -------   உன் கைகளில் வரவும் வேண்டுமா )
6உன்னுடன்   ( ------   -----   -----   ------   -----  நெஞ்சை களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி )
7. நாயகன்  ( -----   -----   -----    -----  வாய் மொழி சொன்னால் தெய்வீகம் ) 
8. வாழ்க்கை வாழ்வதற்கே ( -----   -----   ------   -----  அசைய காண்பது கன்னியர் உள்ளம் ) 
9தெனாலிராமன்   ( -----   -----   -----   ------  சொல்லாமல் போவார் அல்லாவிடம்) 
10. மீனவ நண்பன் ( ------   -----   தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே கொஞ்சும்  தமிழோசை )
11. தூய உள்ளம்  ( -----   -----   -----    -----  -----  நீல வான வீதி மேலே ) 
12. சிவகாசி  ( -----   -----   ------   -----   சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா )   
 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 44  க்கான விடைகள்:
 
திரைப்படம்                                பாடலின் தொடக்கம் 
 
1. பெற்றால் தான் பிள்ளையா ( நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி  இந்த நாடே இருக்குது தம்பி )
2. சித்திரம் பேசுதடி  ( இடம் பொருள் பாத்து  இதயத்தை மாத்து  இது ஒரு காதல் கூத்து )
3. 3   ( நீ பார்த்த விழிகள்  நீ பார்த்த நொடிகள் )
4. பாவ மன்னிப்பு  ( வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை ) 
5அப்பு   ( இடம் தருவாயா மனசுக்குள்ளே  தரமாட்டேன் தரமாட்டேன் இடம் தரமாட்டேன் )
6மயங்குகிறாள் ஒரு மாது ( வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர்காதல் )
7. மயக்கம் என்ன  ( காதல் என் காதல்  அது கண்ணீரிலே  போச்சு அது போச்சு அட  தண்ணீருல ) 
8. ராஜ பாண்டி ( மகராணி மகராணி மாளிகை மகராணி மண் குடிசை தேடி வந்த மன்மத ரதத்தேர் நீ )   
 
   
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
 
நல்ல இடம் நீ வந்த இடம் 
வரவேண்டும் காதல் மகராணி                     

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:        கலாட்டா கல்யாணம்   
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் :  Madhav, முத்து, மதுமதி.   

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும். (Google - Search  அதிகமாக உபயோகிக்கவும்).