Tuesday, September 24, 2013

சொல் வரிசை - 41


சொல் வரிசை - 41  புதிருக்காக, கீழே 6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
1. வேட்டையாடு விளையாடு ( ----- ----- ------ ----- போகும் இடம் எல்லாமே கூடக்கூட வந்தாய் )
2. மின்சார கனவு ( ----- ------- ------ ------- ------ விளையாட ஜோடி தேவை )
3. கலாட்டா கல்யாணம் ( ----- ----- ----- ----- ----- வரவேண்டும் காதல் மகராணி )
4. பணக்காரப் பெண் ( ----- ----- ----- உன் இதழில் எழுதும் இனிய கவிதை இன்ப தேன் சிந்தும் நாள் ) 
5. நீ வருவாய் என (----- ----- ---- ---- நீ வருவாய் என)
6. பூந்தளிர் ( ---- ---- ---- ---- ---- என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை)
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 40 க்கான விடைகள்:
திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
 
1. செங்கோட்டை ( பாடு பாடு பாரத பண்பாடு மேலை நாடும் போற்றிடும் பண்பாடு)
2. மௌன ராகம் ( நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் செவ்வானம் நான் )
3. தியாகம் ( தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே )
4. புன்னகை மன்னன் ( கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் )
5. அன்பே சிவம் ( பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் )
6. நினைவுகள் மறைவதில்லை ( மலர  துடிக்கும் பூவே மடியில் ஆட வா )
 
 
மேலே உள்ளதொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
 
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர 
               
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:       உதய கீதம் 
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் : Madhav, முத்து, மதுமதி, 10அம்மா.

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

2 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete