Monday, September 16, 2013

சொல் வரிசை - 40



சொல் வரிசை - 40  புதிருக்காக, கீழே 6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. செங்கோட்டை                          ( ------ ------- பாரத பண்பாடு மேலை நாடும் போற்றிடும் பண்பாடு)
2. மௌன ராகம்                            ( ------  -----  செல்லாதே வா எந்நாளும் உன் செவ்வானம் நான் )
3. தியாகம்                                       ( ------- ------  பூவே பூந்தென்றல் காற்றே )
4. புன்னகை மன்னன்                    ( ------- ------- கருவில் பிறந்தது ராகம் )
5. அன்பே சிவம்                             ( ------- ------- புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் )
6. நினைவுகள் மறைவதில்லை ( ------- ------   பூவே மடியில் ஆட வா )
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 39 க்கான விடைகள்:
திரைப்படம்                                                    பாடலின் தொடக்கம்
 
1. அவள் தந்த உறவு                             ( நினைத்து பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது )
2. கேள்வியும் நானே பதிலும் நானே ( நினைத்து நினைத்து வரைந்த ஓவியம் )
3. அவசர கல்யாணம்                            ( பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும் )
4. நேற்று இன்று நாளை                       ( நெருங்கி நெருங்கி பழகும்போது நெஞ்சம் ஒன்றாகும் )
5. களத்தூர் கண்ணம்மா                     ( அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே )
6. மல்லிகா                                             ( வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே )
 
மேலே உள்ளதொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

நினைத்து நினைத்து பார்த்தேன்  
நெருங்கி அருகில் வருவேன்                    

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:       7G ரெயின்போ காலனி           
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் : Madhav, முத்து, மதுமதி.

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

4 comments:

  1. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. மதுமதி,

    விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete