எழுத்துப் படிகள் - 37 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் பிரபு நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (3,3) பிரபு நடித்ததே.
மேலும் வழக்கமான குறிப்புகளுடன், அந்த திரைப்படங்கள் வெளியான வருடங்களும் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்.
1. தடியடி தற்காப்புக் கலை (7) (2008)
2. தங்கமான நெஞ்சம் (5) (1998)
3. சீர்வரிசைக்கு முதலில் சீமானின் செல்வம் (4) (1995)
4. பயமறியாத வனராஜா (4,4) (1988)
5. பொழுது முழுதும் முழு நிலவு (5,4) (1986)
6. அபூர்வ ஜென்மங்கள் (5,5) (1982)
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், இதே வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
6. அபூர்வ ஜென்மங்கள் (5,5) (1982)
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
இறுதி விடைக்கான திரைப்படத்தில் ஜோடி குஷ்பூ.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 36 க்கான குறிப்புகளின் விடைகள்:
1. அய்யா! 143 (2,1,2,1) (1991) - சார் ஐ லவ் யூ
இறுதி விடை: சாமந்திப்பூ
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முத்து, மதுமதி,
2. இரு அவதாரங்கள் (3,6) (1980) - ராமன் பரசுராமன்
3. மகிழ்விக்கும் இசைப்பண் (4,3) (1982) - ஆனந்த ராகம்
4. சதியில் சிக்கிய நெஞ்சற்ற மாந்தர் வம்சம் (4) (1976) - சந்ததி
5. சிவகுமாரனுக்குப் பிடித்த ராகம் (8) (1973) - சண்முகப்பிரியா
6. தீயிலே உருவான பூ (5,3,3) (1981) - நெருப்பிலே பூத்த மலர்
6. தீயிலே உருவான பூ (5,3,3) (1981) - நெருப்பிலே பூத்த மலர்
இறுதி விடை: சாமந்திப்பூ
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முத்து, மதுமதி,
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
மதுமதி,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.