எழுத்துப் படிகள் - 34 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சரோஜாதேவி நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (7) சரோஜாதேவி நடித்ததே.
மேலும் வழக்கமான குறிப்புகளுடன், அந்த திரைப்படங்கள் வெளியான வருடங்களும் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்.
1. கண்டால் வயிறு நிறையும் (5,2,3) (1962)
2. மன்னனின் ஆணை (3,4) (1967)
3. பாய்ந்து செல்லும் ஆறு (3,2) (1969)
4. கல்யாண மேடை (7) (1961)
5. பங்கு பகிர்ந்தளித்தல் (7) (1959)
6. மாங்கல்ய அதிர்ஷ்டம் (2,5) (1966)
6. மாங்கல்ய அதிர்ஷ்டம் (2,5) (1966)
7. ஐநூறாயிரம் (3,4) (1969)
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், இதே வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
இறுதி விடைக்கான திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக நடித்திருந்தார்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 33 க்கான குறிப்புகளின் விடைகள்:
1. ஜெயலலிதாவின் நேசத்தை நாடி (4,2) - அன்பைத் தேடி
(சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன் )
2. ரகுராமன், பலராமன், ஜெயராமன், ஸ்ரீராமன்..... (3,4,4) - ராமன் எத்தனை ராமனடி
(நல்லவர் வணங்கும் தேவனடி )
3. பொதுவான பேரரசன் (4,8) - ஜெனரல் சக்கரவர்த்தி
(முதலாவது ஆங்கிலச் சொல், படைத்தலைவரையும் குறிக்கும்)
4. பள்ளி செல்லாத பெருநிலக்கிழார் (5,5) - படிக்காத பண்ணையார்
(K.S.கோபாலகிருஷ்ணன் எழுதி, தயாரித்து, இயக்கிய திரைப்படம் )
5. தலையைக் கொய்த, நீண்ட ஆயுளைப் பெற்றவர் (5) - சிரஞ்சீவி
(இந்தப் பெயரில் ஒரு அரசியல்வாதி நடிகர் இருக்கிறார் )
6. கொஞ்சம் மாற்றினாலும் பாண்டிய வீரன், மாறாத மாறன் (2,5) - வீர பாண்டியன்
6. கொஞ்சம் மாற்றினாலும் பாண்டிய வீரன், மாறாத மாறன் (2,5) - வீர பாண்டியன்
(ஒரு அரசியல்வாதி நடிகரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார் )
7. ஊரைக் காக்கும் கடவுள் (3,4) - காவல் தெய்வம்
(மதுரை வீரன், அய்யனார், கருப்பண சாமி ... )
இறுதி விடை: அமர காவியம்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, 10அம்மா, முத்து, வைத்தியநாதன், மதுமதி
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.
நாகராஜன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஅனைத்தும் சரியான விடைகள். பாராட்டுக்கள் நன்றி.
மதுமதி,
ReplyDeleteஅனைத்தும் சரியான விடைகள். பாராட்டுக்கள் நன்றி.
வைத்தியநாதன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.