Sunday, August 11, 2013

எழுத்து அந்தாதி - 8



எழுத்து அந்தாதி - 8 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.  மதுரை, காசி தவிர்த்த முப்பெரும்தேவியரில் ஒருவர் (3,4)                 (1978)    
2.  சிதிலம் மென்மை மாறி சிதிலமடைந்த பூச்சி (4)                                     (2008)
3.  சந்தனக்கடவுளின் மனைவியை இப்படியும் அழைக்கலாம் (4,6)       (சத்யராஜ்)
4.  மிஸ் ரோஸி தலைதப்ப மாயம் ஆகிக்கரைந்த சாவித்திரி டீச்சர் (6) (1955)
5.  வாலை சூடமா கரைத்தது?  ஆரமணிய அழை  (2,3)                                   (1975)        
6.  விண்ணுக்கு ஒப்ப   (5,2)                                                                                (விஜயகாந்த்)
 
7.  சரண் அடைந்த முன்னாள் டிஜிபி  (4)    
                                                   (பவர் ஸ்டார்)


வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின்  பெயரோ  இடம்  பெற்றிருக்கும்.  குறிப்புகளின் உதவிகொண்டு  விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது, 7-வது படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 7-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.    

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments)  அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 7 க்கான விடைகள்:

1.   தத்தித் தாவிக் குதிக்கும் பருவம்  (4,3)                              (2006)                                        - துள்ளுற வயசு
 2.   சொந்த நாட்டில் வாழ்பவர்  (3)                                            (விஜயகாந்த்)                      - சுதேசி
3.   கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாள்  (3,4)   (சிவாஜி கணேசன்)              - சித்ரா பௌர்ணமி
4.   மத்தளம் கொட்டுவதில் மகாவித்வான்  (5,8)              (சிவாஜி கணேசன்)              - மிருதங்க சக்கரவர்த்தி
5.   இனிப்பாய் உள்ளதே  (6)                                                      (ஜீவா)                                       - தித்திக்குதே   
6.    ----  ----, நாடினேன் தந்தது வாசலில் நின்றது வாழவா என்றது (4,4) (1997)           - தேடினேன் வந்தது

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   முத்து, Madhav, 10அம்மா, மதுமதி, சாந்தி நாராயணன்
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 

 
ராமராவ்

6 comments:

  1. மதுமதி,

    எல்லாமே சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. MeenuJai,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  6. நாகராஜன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete