எழுத்துப் படிகள் - 36 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (6) சிவகுமார் நடித்ததே.
மேலும் வழக்கமான குறிப்புகளுடன், அந்த திரைப்படங்கள் வெளியான வருடங்களும் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்.
1. அய்யா! 143 (2,1,2,1) (1991)
2. இரு அவதாரங்கள் (3,6) (1980)
3. மகிழ்விக்கும் இசைப்பண் (4,3) (1982)
4. சதியில் சிக்கிய நெஞ்சற்ற மாந்தர் வம்சம் (4) (1976)
5. சிவகுமாரனுக்குப் பிடித்த ராகம் (8) (1973)
6. தீயிலே உருவான பூ (5,3,3) (1981)
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், இதே வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
6. தீயிலே உருவான பூ (5,3,3) (1981)
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
இறுதி விடைக்கான திரைப்படத்தில் விஜயகாந்தும் நடித்திருக்கிறார்.
சிவகுமார் நடித்த திரைப்படங்களின் பட்டியலை காண கீழ்க்கண்ட Link சென்று பார்க்கவும்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 35 க்கான குறிப்புகளின் விடைகள்:
1. துறவறம் பூண்ட மன்னன் (4) (1985) - ராஜரிஷி
2. சின்னத்திரையில் ராதிகாவின் நெடுந்தொடர் (2,2) (1974) - வாணி ராணி
3. சிறந்த இல்லம் (3,2) (1956) - நல்ல வீடு
4. தொடர்ச்சியான விலங்கு (4) (1982) - சங்கிலி
5. திருமணத்தை உறுதிப்படுத்தும் சடங்கு (4,5) (1962) - நிச்சய தாம்பூலம்
6. நீதி எவ்விடம்? (4,3) (1972) - தர்மம் எங்கே
6. நீதி எவ்விடம்? (4,3) (1972) - தர்மம் எங்கே
7. பள்ளி மாணவர்களுக்கு ஓலைச்சுவடி நூல்களைச் சுமப்பவன் (7) (1954) - தூக்குத்தூக்கி
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, 10அம்மா, முத்து, மதுமதி, MeenuJai
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
மதுமதி,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்காள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.