Sunday, August 25, 2013

எழுத்து அந்தாதி - 10


எழுத்து அந்தாதி - 10 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1. கேடு கெட்ட தம்பிகள் அக்காளை மாற்றியது குழந்தைக்காக (6) (பிரபு)
2. வாசம் போன மருந்தாக மாற்றியதென்ன முருகா  (3) (கரண்)
3. மூன்று முடிச்சு போட்ட அரசன் புருஷன்  (2,4,2)      (1992)
4. ராசாதாங்க இடையில் வீரனை சிவ அருள் பெற்ற இளவரசனாக

    மாற்றியது    (6) (சிவாஜி)
5. முதன் முதலில் ராஜ முந்திரியில் வசித்தவன் பெயர் (2) (1966)
6. தலைமுடி பிச்சிப்பார்த்து கலைத்து உலகு விட்டு சென்ற சலகு (7) (1968)

 


வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின் பெயரோ இடம் பெற்றிருக்கும். குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 6-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments) அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 9 க்கான விடைகள்:

1. மலரே புதிய மலரே (2,3,2) (1987)                                                                                        -  பூவே இளம் பூவே
2. பொழுது போக்கே எனது வழக்கம் (4,2,4) (1990)                                                                -  வேடிக்கை என் வாடிக்கை 
3. கரம் பிடித்ததில் விருப்பமில்லாத குற்றவாளி (2) (1951)                                                 -  கைதி 
4. மயக்கம் தெளிந்தாலும் மோதின மிருகம் கொண்ட கர்வம் (3) (விஷால்)                     -  திமிரு 
5. வருண் புத்தி வராது நடுவில் பெருஞ்சினம் கொண்டவன் (3)
(பாக்கியராஜ்)                 -  ருத்ரா    
6. மன்னன் கரம் பட்டால் தப்பாகாது (2,2,3) (பிரபு)                                                                -  ராஜா கைய வச்சா 
7. பூந்தி சாப்பிடாமல் வாலில்லா டால்பின் போனதால் கசங்கிய மலர் (6)
(சிவகுமார்)  -  சாமந்திப்பூ 



சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, யோசிப்பவர், 10அம்மா, மதுமதி, சாந்தி நாராயணன், Madhav, நாகராஜன்

இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.


ராமராவ்

4 comments:

  1. மதுமதி,

    விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete