Saturday, August 31, 2013

திரைஜாலம் புதிர்கள்: ஓராண்டு நிறைவு

 
 
வணக்கம் நண்பர்களே,

திரை ஜாலம் வலை தொடங்கப்பட்டு இந்த வாரத்துடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.  திரைஜாலத்தில் கடந்த  ஒரு ஆண்டில் 126 பதிவுகள்  வெளிவந்துள்ளன. இவற்றில் 121  புதிர்கள்  வெளிவந்துள்ளன.
 
                  சொல்வரிசை         புதிர்கள்   =   38
                  எழுத்துப் படிகள்    புதிர்கள்   =   38
                  எழுத்து வரிசை      புதிர்கள்   =   35
                  எழுத்து அந்தாதி    புதிர்கள்   =   10

திரைஜாலம் புதிர்களை, வார்த்தை விளையாட்டு  குழுவிலிருக்கும்  அனைவருக்கும்  அனுப்பி வருகிறேன். மேலும் "தமிழ் மணம்" மற்றும்  "இன்ட்லி" வலைத்  திரட்டிகளிலும்  இணைத்து வருகிறேன்.   

திரைப்படங்களைப் பற்றியும், திரைப்படப்  பாடல்களைப் பற்றியும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள நண்பர்கள் பலரும் மேற்கண்ட  திரைஜாலம்  புதிர்களில்  பங்கேற்று சரியான விடைகளை அனுப்பி வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கெல்லாம் எனது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள் பற்றி அதிக ஆர்வமுள்ளவர்கள் பலருக்கு திரைஜாலம் புதிர்கள் பற்றி தெரியாமலிருக்கலாம். அவர்கள்  உங்களது  நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ அல்லது குடும்பத்தினராகவோ இருக்கலாம். அவர்களுக்கும்  திரை ஜாலம் புதிர்கள் பற்றி  சொல்லுங்கள்.  அவர்களும் இவற்றில்  பங்கேற்க  வாய்ப்பு  அமையலாம்.
 
புதிர்களில், உங்கள் கருத்துப்படி, சுவாரசியமான  புதிர் எது, கடினமான புதிர் எது  என்று எழுதி அனுப்பலாம். மேலும், கொடுக்கப்படும்  குறிப்புகள் போதுமானதாக உள்ளனவா, சுவையாக உள்ளனவா என்ற உங்களது கருத்துக்களையும் எழுதி அனுப்பவும்.    
 
உங்களது கருத்துக்களை,  பின்னூட்டமாக  (Comments)  மட்டும்  அனுப்புமாறு வேண்டுகிறேன். e-MAIL  மூலமாக அனுப்ப  வேண்டாம். பின்னூட்டமாக   அனுப்பினால் மட்டுமே  உங்கள்  கருத்துக்களை அப்படியே  பிரசுரிக்க இயலும்.

திரைஜாலத்தில்  இன்னொரு  ஜாலம், புதிர்களாக  "சொல் அந்தாதி" என்ற  தலைப்பில் வெளிவரப் போகின்றது. சொல்  அந்தாதி  புதிர்  பற்றிய விளக்கம் விரைவில்  வலைப்பதிவில்  வெளிவரும்.  நண்பர்கள்  அதிக  அளவில்  இந்த புதிய  திரைஜாலம் புதிரிலும் பங்கேற்று  விடைகளை  அனுப்பி  என்னை மேலும்  ஊக்குவித்து  ஆதரவு  அளிக்குமாறு  வேண்டிக் கொள்கிறேன்.     

திரைஜாலம் புதிர்கள்  தொடர்ந்து  வெளிவரும் அதே  வேளையில் புதிதாக "திரைக்கதம்பம்" என்ற  தலைப்பில்  வலைப்பிரிவு  ஒன்று  தொடங்கப் போகிறேன். இந்த  புதிய  வலைப் பிரிவில், நண்பர்கள் பங்கேற்கும் வகையில், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், திரைப்படக்  கலைஞர்கள்  பற்றிய கொஞ்சம் புதுவிதமான புதிர்கள், மற்றும்  திரை  குறுக்கெழுத்துப்  புதிர்கள், வெளிவரப்போகின்றன. திரைக்கதம்பம் புதிர்களிலும்  நண்பர்கள்  அதிக  அளவில் பங்கேற்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.    

நன்றியுடன்,

ராமராவ்
       

Friday, August 30, 2013

எழுத்துப் படிகள் - 38



எழுத்துப் படிகள் - 38 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும்  ஜெமினி கணேசன்  நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (3,3)   ஜெமினி   கணேசன் நடித்ததே.

 
மேலும் வழக்கமான குறிப்புகளுடன், அந்த திரைப்படங்கள் வெளியான வருடங்களும் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்.
1. கடிதங்கள் தருபவனின் சகோதரி   (6,3)                 (1970)
2. பெண்கள் நெஞ்சம் குறையாத சொத்து  (5,4,4,4) (1962)
3. மண்ணுலகின்  விண்ணுலக தேவதை?  (3,3)    (1958)
4. தாய்வழி முறைப்பெண்  (3,3)                                        (1955)
5. வரவிருக்கும் பருவம் (6)                                                     (1970)
6. பாசத்திற்கொரு  தமையன்  (6,4)
                                 (1971)
 
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், இதே வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:
 
இறுதி விடைக்கான திரைப்படத்தில் ஜோடி சரோஜாதேவி .
 
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 37 க்கான குறிப்புகளின் விடைகள்:
 
1.    தடியடி தற்காப்புக் கலை (7)                                         (2008)   - சிலம்பாட்டம் 
2.    தங்கமான நெஞ்சம் (5)                                                      (1998)  - பொன் மனம் 
3.    சீர்வரிசைக்கு முதலில் சீமானின் செல்வம் (4)        (1995)  - சீதனம்  
4.    பயமறியாத வனராஜா (4,4)                                             (1988)  - அஞ்சாத சிங்கம்  
5.   பொழுது முழுதும் முழு நிலவு (5,4)                                (1986)   - நாளெல்லாம் பௌர்ணமி   
6.   அபூர்வ ஜென்மங்கள் (5,5)
                                                  (1982)  - அபூர்வப் பிறவிகள்  

இறுதி விடை:        சின்ன தம்பி          

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முத்து, மதுமதி, 10அம்மா 
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
 
ராமராவ்

Wednesday, August 28, 2013

சொல் வரிசை - 38


சொல் வரிசை - 38 புதிருக்காக, கீழே  (ஏழு)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   ரத்தத் திலகம்                                  ( -------  ------- ------- தலை என் குனிகிறது)
2.   பூப் பூவா பூத்திருக்கு                (  ------  -------  -------  என் வாசல் தேடி வந்த வேளை )
3.   பொன்னித் திருநாள்                 ( -------  --------  -------  வேட்கை தீரவே வீசு )
4.   தங்கைக்காக                            ( -------  --------  ------  நிழலாடுது தந்தை மனமிங்கு உறவாடுது)
5.   குலதெய்வம்                             ( -------  ------- -------  ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன்) 
6  எங்கள் அண்ணா                     ( -------  -------   --------  மைனாவே ஜில்லென்று சிரிக்கும் ரோஜாவே)
7  விடியும்வரை காத்திரு           ( -------  ------   ------  உன் அன்பை என்னென்பேன்)
 
 
எல்லாப் பாடல்களின்  தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
பாடல் காட்சியில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது,  பாடல்களின் தொடக்கச் சொற்கள்,  சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 37 க்கான விடைகள்:
 
திரைப்படம்                                                       பாடலின் தொடக்கம்                          


1.   உதய கீதம்                                                           ( சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் )
2.   வாலி                                               (வானில் பாயுதே வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா )
3.   யூத்                                                        (சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்  )
4.  காலங்களில் அவள் வசந்தம்( பாடும் வண்டே பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை)
5.   மகாதேவி                                     ( சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே சங்கீத வீணையும் ) 
6  பொண்ணுக்கு தங்க மனசு                 ( தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே )
7  என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ( குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா )

 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

சங்கீத வானில் சந்தோசம் பாடும் 
சிங்கார தேன் குயிலே                   

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      சின்னப் பூவே மெல்லப் பேசு          
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, முத்து, 10அம்மா, மதுமதி.        

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.