Sunday, October 28, 2012

எழுத்துப் படிகள் - 7

எழுத்துப் படிகள் - 7 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை
1 . குல கண்ணியம்
2 . பாசத்துக்கொரு தமையன்
3 . பிறரிடம் பணம் பெற்று நடந்த திருமணம்
4 . கண்டால் வயிறு நிறைந்துவிடும்
5 . இரண்டு வரிகள்
6 . தங்க உருவம்
7 . மேன்மக்கள்

திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின்   3- வது எழுத்து என்றுஅப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.


விடைக்கான திரைப்படமும் ஜெமினி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 6 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 குங்குமம்
2 ஆலயமணி
3 பாசமலர்
4 மணமகன் தேவை
5 அந்த நாள்
6 சம்பூர்ண ராமாயணம்
7 படிக்காத மேதை
இறுதி விடை: குலமகள் ராதை

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முகிலன், 10அம்மா
 
குறிப்புகளின் விடைகளில் 7 ல் 5 க்கு சரியான விடைகளை அனுப்பியவர்: முத்து

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்

3 comments:

  1. முத்து,

    அனைத்து விடைகளையும் சரியாக அனுப்பியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Madhav,

    உங்களது அனைத்து விடைகளும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. Padmavathi Thirumudi,

    உங்களது அனைத்து விடைகளும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete