எழுத்து வரிசை புதிர் - 5 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 கிராமத்தில் மரியாதையாக அழைக்கப்படும் சரத்குமார்
2 கமலின் ஆசான்
3 வினயின் அச்சுறுத்தல்
4 சிவாஜி ஆண்டவனின் அவதாரம்
5 விஷ்ணுப்பிரியன் மதுமிதாமேல் கொண்ட பிரியம் உண்மையாக
6 மோனிகா ஒரு எட்டுக்கால் பூச்சி
7 ரஜினிக்கு தனுஷ்
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும். அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.comமின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 4 க்கான விடைகள்:
1 கமல் என்ற காமதேவனின் கணை - மன்மதன் அம்பு
2 சூர்யா சூரியன்? - ஆதவன்
3 விஜய் ஒரு பறவை - குருவி
4 அரவிந்த சாமியின் மூச்சு வாயுவே - என் சுவாசக் காற்றே
5 பாக்கியராஜுக்காக காலைப் பொழுதை எதிர்நோக்கு - விடியும்வரை காத்திரு
6 நிலவு முகத்தவள் ஜோதிகா - சந்திரமுகி
7 தனுஷின் விளையாட்டு மைதானம் - ஆடுகளம்
எழுத்து வரிசை புதிர் விடை - விரும்புகிறேன்
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, MeenuJai, சாந்தி நாராயணன், முகிலன், 10அம்மா, நாகராஜன், மனு
இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி.
நன்றி. வாழ்த்துகள்.
யோசிப்பவர்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. நன்றி வாழ்த்துகள்.
நீங்கள் கூறியிருந்த கருத்துப்படி, 5வது குறிப்புக்கு அந்த எழுத்தைக் கடைசியாகக் கொண்ட படம் வேறு ஏதும் எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். முடிந்தவரை, எல்லோருக்கும் தெரிந்திருக்கும் திரைப்படங்களாக புதிர்களை அமைக்க முயற்சி செய்து வருகிறேன்.
Madhav ,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி.
நன்றி.வாழ்த்துகள்.