Sunday, October 21, 2012

எழுத்துப் படிகள் - 6

எழுத்துப் படிகள் - 6 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை
1 . தமிழ் வார பத்திரிகை
2 . கோவிலை அடைந்த நேரம்
3 . அன்பான பூப்போன்ற தங்கை சாவித்திரி
4 . பானுமதிக்கு வரன் வேண்டும்
5 . அன்றைய தினம்
6 . இதிகாசங்களுள் ஒன்று
7 . பள்ளி செல்லாத அறிவாளி 
 
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வதுஎழுத்து என்றுஅப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்

விடைக்கான திரைப்படமும் சிவாஜி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 5 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 நாடோடி மன்னன்
2 காஞ்சித்தலைவன்
3 நம் நாடு
4 ஆயிரத்தில் ஒருவன்
5 பணத்தோட்டம்
6 பாக்தாத் திருடன்
7 காவல்காரன்
இறுதி விடை: நவரத்தினம்

சரியான விடையை அனுப்பியவர்: Madhav
70% விடைகளை அனுப்பியவர்: சாந்தி நாராயணன்
இவர்கள் இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்

5 comments:

  1. முகிலன்,

    குறிப்பில் 4-வது விடை மட்டும் சரியல்ல. மீண்டும் முயற்சியுங்கள். மற்ற விடைகள் அனைத்தும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. முகிலன்,

      4-வது விடையையும் சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள். அனைத்து விடைகளும் சரி.
      நன்றி. வாழ்த்துகள்.

      Delete
  2. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. நன்றி வாழ்த்துகள்

    ReplyDelete
  3. முத்து,

    1 தவறு. தமிழ் வார பத்திரிகை பெயர் . சிவாஜி நடித்தது.

    4 பானுமதி சிவாஜி நடித்த படம், வரன் வேண்டும் = சமமான தமிழ் வார்த்தை. கண்டு பிடித்தால், படத்தின் பெயர் கிடைக்கும்.

    மற்ற 5 படங்களின் பெயர்கள் சரி.

    இறுதி விடையையும் கண்டு பிடியுங்கள்

    ReplyDelete
  4. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. நன்றி வாழ்த்துகள்

    ReplyDelete