வணக்கம் நண்பர்களே,
எழுத்துப் படிகள் புதிரை சுவாரசியமாக ஆக்க ஒரு மாற்றம். திரைப்படப் பெயர்களுக்குப் பதிலாக, அவற்றைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எழுத்துப் படிகள் - 5 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
1 . எம்.ஜி.ஆர் + ரஜினி = எம்.ஜி.ஆர்
2 . பல்லவன் எம்.ஜி.ஆர்
3 . இந்தியாவில் ஸ்ரீதேவிக்கு சித்தப்பா எம்.ஜி.ஆர்
3 . இந்தியாவில் ஸ்ரீதேவிக்கு சித்தப்பா எம்.ஜி.ஆர்
4 . அடிமை எம்.ஜி.ஆர்
5 . செல்வச்சோலை
6 . அயல்தேசத்து கள்ளன் எம்.ஜி.ஆர்
7 . பாதுகாப்பவர் எம்.ஜி.ஆர்
6 . அயல்தேசத்து கள்ளன் எம்.ஜி.ஆர்
7 . பாதுகாப்பவர் எம்.ஜி.ஆர்
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 4 க்கான விடை: காதல் வாகனம்
சரியான விடையை அனுப்பியவர்கள்: Madhav , Ramachandran Vaidhyanaathan ,
நாகராஜன், Muthu Muthusubramanyam
இவர்கள் அனைவர்க்கும் நன்றி. வாழ்த்துகள்.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரியே.
நன்றி. வாழ்த்துகள்.
சாந்தி நாராயணன்,
ReplyDelete2 , 3 தவறு. மற்ற ஐந்தும் சரி.