கீழே ஆறு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1 . இங்கேயும் ஒரு கங்கை
2 . காதல் ஓவியம்
3 . ரௌத்திரம்
4 . பிரண்ட்ஸ்
5 . நான் பாடும் பாடல்
6 . மீனவ நண்பன்
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடல்: இருவர் பாடியது. (டூயட்).
பாடல் காட்சியில் நடித்தவர்களில் ஒருவர் ராதா.
பாடல் காட்சியில் நடித்தவர்களில் ஒருவர் ராதா.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 5 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம் தொடக்கச் சொல்
எங்க வீட்டுப் பெண் சிரிப்பு பாதி அழுகை பாதி சிரிப்பு
பிரம்மா வருது வருது இளங்காற்று வருது
வெற்றிக்கொடி கட்டு சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா சிரிப்பு
காலாட் படை வருது வருது ஒரு புதிய புதிய படை வருது
மாடப்புறா சிரிக்க தெரிந்தால் போதும் சிரிக்க
கவலை இல்லாத மனிதன் சிரிக்க சொன்னார் சிரித்தேன் சிரிக்க
ராஜா ராணி சிரிப்பு அதன் சீர்தூக்கி பார்ப்பதே நமது சிரிப்பு
தூங்காதே தம்பி தூங்காதே வருது வருது விலகு விலகு வருது
மேலே உள்ள எட்டு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல்
இரண்டு வரிகள்
இரண்டு வரிகள்
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆண்டவன் கட்டளை.
எல்லா விடைகளையும் அனுப்பியவர்: MeenuJai.
இறுதி விடையை மட்டும் அனுப்பியவர்: Madhav
இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
குறிப்பில் ஒரு சிறு திருத்தம் செய்திருக்கிறேன். பாடியவர்களில் ஒருவர் ராதா அல்ல. பாடல் காட்சியில் நடித்திருப்பவர்களில் ஒருவர் ராதா.
ReplyDeleteMadhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. நன்றி. வாழ்த்துகள்.