கீழே எட்டு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1 . எங்க வீட்டுப் பெண்
2 . பிரம்மா
3 . வெற்றிக்கொடி கட்டு
4 . காலாட்படை
5 . மாடப்புறா
6 . கவலை இல்லாத மனிதன்
7 . ராஜா ராணி
8 . தூங்காதே தம்பி தூங்காதே
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் இரண்டு வரிகளாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு (CLUE):
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு (CLUE):
மொத்தம் மூன்றே அடிப்படைச் சொற்கள் தான். ஒவ்வொன்றும் 2 அல்லது 3 தடவை திரும்ப இடம் பெற்று எட்டு சொற்கள் கொண்ட பாடல் வரிகளாக அமைந்துள்ளன.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 4 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம் தொடக்கச் சொல்
அனுபவி ராஜா அனுபவி முத்துக் குளிக்க வாரீகளா முத்து
பயணங்கள் முடிவதில்லை மணி ஓசை கேட்டு எழுந்து மணி
நிச்சய தாம்பூலம் மாலை சூடும் மணநாள் மாலை
நல்லவனுக்கு நல்லவன் உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி உன்னை
வல்லவன் ஒருவன் தொட்டு தொட்டு பாடவா தொட்டு
தேடி வந்த மாப்பிள்ளை தொட்டுக் காட்டவா தொட்டு
தூறல் நின்னு போச்சு தாலாட்ட நான் பொறந்தேன் தாலாட்ட
மேலே உள்ள ஏழு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல்
இரண்டு வரிகள்
இரண்டு வரிகள்
முத்து மணி மாலை - உன்னை
தொட்டு தொட்டு தாலாட்ட
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் சின்னக் கவுண்டர்.
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்: Madhav, MeenuJai.
இறுதி விடையை மட்டும் அனுப்பியவர்: Ramachandran Vaidyanathan
மூவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
No comments:
Post a Comment