Tuesday, October 16, 2012

எழுத்து வரிசை - 3

எழுத்து வரிசை புதிர் - 3 க்கான திரைப்படங்களின் பெயர்களைக்  கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்: 

1     நவரத்தினங்களில் ஒரு ராஜ்கிரண்    
2     திரிஷா தான் எல்லாம்    
3     செந்திலுக்கு பெண் பார்க்கப் போகும் ரஜினி  
4     பத்மப்பிரியா! அமைதியாய் இரு  
5     ரஜினியின் கோல் மால்
6     லைலாவின் பிரஷாந்த்   

இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக்  கண்டுபிடிக்க வேண்டும்.  அந்த திரைப்படப் பெயர்களின்  கடைசி எழுத்துக்களை மட்டும்  எடுத்துக்கொண்டு  அவற்றை கலைந்து  வரிசைப் படுத்தினால்  வேறு ஒரு  திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.  அந்த திரைப்படத்தின் பெயரை  கண்டு பிடிக்க வேண்டும். 

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர்  விடைக்கான  திரைப்படத்தின்  பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை  பின்னோட்டம்  மூலமாகவோ அல்லது  sathyaapathi@gmail.com  மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.  

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
                      
எழுத்து வரிசை - 2 க்கான விடைகள்:

1     விஷாலின் கர்வம்  - திமிரு  
2     ஜெயம் ரவியின் தகிடு தத்தம்   - தில்லாலங்கடி
3     படைக்கும் சத்யராஜ்      - பிரம்மா
4     மாயாஜாலக்கார சூர்யா    -  மாயாவி
5     சேரன் பிரசன்னா இடையே மாறுபாடு - முரண்  

எழுத்து வரிசை புதிர் விடை - விருமாண்டி
 
சரியான விடைகளை  அனுப்பியவர்கள்:  MeenuJai ,  10அம்மா ,  யோசிப்பவர், சாந்தி நாராயணன், Madhav
இவர்கள் ஐவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.    



ராமராவ்

2 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. MeenuJai,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete