Tuesday, October 2, 2012

எழுத்து வரிசை - 1

வணக்கம் நண்பர்களே,  

திரை ஜாலத்தில் அடுத்த ஜாலம்  " எழுத்து வரிசை " 

இதுவும் திரைப்படப் பெயர்களைப் பற்றியதே. 

சில திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை ஒரு குறிப்பிட்ட வரிசையில்
அமைத்தால் வேறு ஒரு திரைப்படப் பெயர் கிடைக்கும். 
இதுவே எழுத்து வரிசை. இதை ஒரு புதிராக அமைத்திருக்கிறேன்.

எழுத்து வரிசை புதிர் பற்றிய விளக்கம்:

சில திரைப்படப் பெயர்களைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புகள்  கொடுக்கப்பட்டிருக்கும்.   குறிப்புகள் திரைப்படத்தின் பெயர்களைப் பற்றியோ அல்லது திரைப்படத்தில் பங்கேற்ற கலைஞர்களைப்   பற்றியோ  அல்லது  அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பிரபல பாடலைப் பற்றியோ அல்லது ஒரு குறுக்கெழுத்துப் புதிராகவோ இருக்கலாம்.

அந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக்  கண்டுபிடிக்க வேண்டும்.  அந்த திரைப்படப் பெயர்களின்  கடைசி எழுத்துக்க்களை மட்டும்  எடுத்துக்கொண்டு  அவற்றை கலைந்து  வரிசைப் படுத்தினால்  வேறு ஒரு  திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்,  அந்த திரைப்படத்தின் பெயரை  கண்டு பிடிக்க வேண்டும். 

எல்லா திரைப்படங்களின் பெயர்களையும் விடைகளில் அனுப்ப வேண்டும்.

கீழே முதல் புதிரை கொடுத்திருக்கிறேன்.

எழுத்து வரிசை புதிர் - 1 க்கான திரைப்படங்களின் பெயர்களைக்  கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்: 

1     விஜய்யையும் அஜீத்தையும் இணைத்த ரஜினி (4,2)  
2     மூவேந்தர்களில் அழகான சசிகுமார்  (4,5)  
3     உண்மையே பேசும் கார்த்திக் (7)
4     அரவிந்த் சாமிக்கு பிடித்த மலர் (2)  
5     எமலோகம் சென்று திரும்பிய ரஜினி (5,3)
6     பாக்கியராஜின் தாலாட்டு (3,4)

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர்  விடைக்கான  திரைப்படத்தின்  பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை  பின்னோட்டம்  மூலமாகவோ அல்லது  sathyaapathi@gmail.com  மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.  

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

ராமராவ்

No comments:

Post a Comment