கீழே ஆறு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1 . ஊட்டி வரை உறவு
2 . பதி பக்தி
3 . பாவ மன்னிப்பு
4 . தாய் மீது சத்தியம்
5 . திருமாங்கல்யம்
6 . தனிப்பிறவி
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின்முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடல்: இருவர் பாடியது. (டூயட்).
பாடல் காட்சியில் நடித்தவர்களில் ஒருவர்: ரவிச்சந்திரன்
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 6 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம் தொடக்கச் சொல்
1 இப்படியும் ஒரு கங்கை சோலை புஷ்பங்களே சோலை
2 காதல் ஓவியம் பூவில் வண்டு கூடும் கண்டு பூவில்
3 ரௌத்திரம் மாலை மங்கும் நேரம் மாலை
4 பிரண்ட்ஸ் தென்றல் வரும் வழியை பூக்கள் தென்றல்
5 நான் பாடும் பாடல் பாடும் வானம்பாடி பாடும்
6 மீனவ நண்பன் நேரம் பௌர்ணமி நேரம் நேரம்
மேலே உள்ள ஆறு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
சோலை பூவில் மாலை தென்றல் பாடும் நேரம்
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: வெள்ளை ரோஜா
எல்லா விடைகளையும் அனுப்பியவர்: Madhav
இவருக்கு நன்றி. வாழ்த்துகள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
anymore clues ? very tough this time :-(
ReplyDeleteஇன்னும் ஒரு குறிப்பு:
Deleteநான்காவது சொல்லும் ஆறாவது சொல்லும் ஒன்றே. இனி விடையை கண்டுபிடிக்க முடியும் என நம்புகிறேன்.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. நன்றி வாழ்த்துகள்