Sunday, October 7, 2012

எழுத்து வரிசை - 2


எழுத்து வரிசை புதிர் - 2 க்கான திரைப்படங்களின் பெயர்களைக்  கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்: 

1     விஷாலின் கர்வம்   
2     ஜெயம் ரவியின் தகிடு தத்தம்   
3     படைக்கும் சத்யராஜ் 
4     மாயாஜாலக்கார சூர்யா 
5     சேரன் பிரசன்னா இடையே மாறுபாடு 

இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக்  கண்டுபிடிக்க வேண்டும்.  அந்த திரைப்படப் பெயர்களின்  கடைசி எழுத்துக்களை மட்டும்  எடுத்துக்கொண்டு  அவற்றை கலைந்து  வரிசைப் படுத்தினால்  வேறு ஒரு  திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.  அந்த திரைப்படத்தின் பெயரை  கண்டு பிடிக்க வேண்டும். 
 
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர்  விடைக்கான  திரைப்படத்தின்  பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை  பின்னோட்டம்  மூலமாகவோ அல்லது  sathyaapathi@gmail.com  மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.  

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
                      
எழுத்து வரிசை - 1 க்கான விடைகள்:
 
1     விஜய்யையும் அஜீத்தையும் இணைத்த ரஜினி  - போக்கிரி ராஜா  
2     மூவேந்தர்களில் அழகான சசிகுமார்  - சுந்தர பாண்டியன்
3     உண்மையே பேசும் கார்த்திக் - ஹரிச்சந்திரா
4     அரவிந்த் சாமிக்கு பிடித்த மலர் - ரோஜா   
5     எமலோகம் சென்று திரும்பிய ரஜினி - அதிசயப் பிறவி
6     பாக்கியராஜின் தாலாட்டு - ஆராரோ ஆரிரரோ
 
எழுத்து வரிசை புதிர் விடை - ரோஜாவின் ராஜா
 
சரியான விடைகளை முழுவதுமாக அனுப்பியவர்கள்: Madhav ,   நாகராஜன்
 
இறுதி எழுத்து வரிசை புதிர் விடையை மட்டும் அனுப்பியவர்கள்: யோசிப்பவர், சாந்தி நாராயணன், சுதாகர் 
 
ராமராவ்

No comments:

Post a Comment