Saturday, September 29, 2012

எழுத்துப் படிகள் - 3

எழுத்துப் படிகள் - 3 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
உனக்காக நான்
மன்னவன் வந்தானடி 
முத்துக்கள் மூன்று  
வீரபாண்டிய கட்டபொம்மன்
பந்த பாசம்   
காவல் தெய்வம்   
ரோஜாவின் ராஜா

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்  அந்த வரிசையில்முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து,  இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும் 
விடைக்கான திரைப்படத்தின் பெயர்  உட்பட அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவையாக அமைந்துள்ளதை காணலாம்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 2 க்கான விடை:   உரிமைக்குரல்.  

சரியான விடையை அனுப்பியவர்கள்: யோசிப்பவர், Madhav ,  
சாந்தி நாராயணன்,  நாகராஜ்,  சுதாகர், லாவண்யா. 

இவர்கள் அனைவர்க்கும் நன்றி. வாழ்த்துகள்.     
ராமராவ்

No comments:

Post a Comment