Friday, September 14, 2012

சொல் வரிசை - 1 விடைகள்

விடைகள் கீழே:

திரைப்படம்                         பாடலின் தொடக்கம்                                                                தொடக்கச் சொல்

வல்லவன் ஒருவன்          அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு          அம்மம்மா
காத்திருந்த கண்கள்         காற்று வந்தால் தலை சாயும் நாணல்                                       காற்று  
நம்ம வீட்டு லட்சுமி         வந்து விடு வட்டமிடு                                                                     வந்து
நம் நாடு                               ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி               ஆடை 
தர்மம் தலை காக்கும்    தொட்டு விட தொட்டு விட தொடரும்                                    தொட்டு 
நேற்று இன்று நாளை      பாடும் போது நான் தென்றல் காற்று                                       பாடும் 

மேலே உள்ள ஆறு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல்
இரண்டு வரிகள்

அம்மம்மா காற்று வந்து 
ஆடை தொட்டு பாடும் 

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் வெண்ணிற ஆடை 

எல்லா விடைகளையும் சரியாக அனுப்பியவர்: MeenuJai
இறுதி விடையை சரியாக அனுப்பியவர்கள்: Madhav, யோசிப்பவர்

சொல் வரிசையில் முதல் புதிர் என்பதாலும், இறுதி விடையை கண்டு 
பிடிப்பது கடினம் என்று நண்பர்கள் கருத்துக்களை அனுப்பியதாலும், 
கொஞ்சம் அதிகமாகவே குறிப்புகளை (CLUES) கொடுத்து விட்டேன். அடுத்த    புதிரிலிருந்து சொற்களைப் பற்றியகுறிப்புகள் மட்டும்  இடம் பெறும்.  

திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள் பற்றிய முழு விவரங்கள்  Google ல் 
மட்டும் சில சமயங்களில் கிடைப்பது கடினமாக இருக்கலாம். கீழ்க்கண்ட   வலைத்தளங்களில் கூட பாடல்களைப் பற்றி முழு விவரங்கள் கிடைக்கும். 
பாடல்களை கேட்டும் மகிழலாம். 
ராமராவ்
 

3 comments:

  1. கொஞ்சம் இளையராஜா தேவா காலத்திற்காக வந்தீர்கள் என்றால் எம்போன்ற சிறார்களுக்கும் பங்கெடுக்க தோதாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. திரை ஜாலம்: சொல் வரிசை திரைப்படப் பாடல்களில் இயற்கையாகவே அமைந்தவை. நண்பர்களுக்காக புதிராக அமைத்திருக்கிறேன். சில சொற்களைக் கொண்டு தொடங்கும் பாடல்கள் பழைய திரைப்படங்களிலிருந்து தான் கிடைக்கின்றன. விடைக்கான பாடலும் பழைய திரைப்படப் பாடல்களாகவே அமைகின்றன. முடிந்தவரை புதிய திரைப்படங்களாக, பாடல்களாக முயற்சிக்கிறேன். நன்றி.

      Delete
  2. Thanks for the information on song sites.

    ReplyDelete